பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/213

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184 பிற்காலச் சோழர் சரித்திரம் அவற்றுள் ஒன்றேனும் அக்கோயிலுக்குரியதாக இக்காலத் தில் இல்லை . நம் இராசேந்திரன், தன் தலை நகராகிய கங்கை கொண்ட சோழபுரத்திற்கு அண்மையில் பெரியதோர் ஏரியை வெட்டுவித்து மக்கட்குத் தண்ணீர்க்குறை இல் லாதவாறு செய்தான். அப்பேரேரி, சோழகங்கம் என்னும் பெயருடையது என்பது திருவாலங்காட்டுச் செப்பேடு களால் அறியப்படுகிறது. அச் செப்பேடுகள் அதனை நீர்மயமான வெற்றித்தூண் என்றும் புகழ்ந்து கூறு கின்றன. இக் காலத்தில் அது பொன்னேரி என்று வழங்கப்படுகிறது. தெற்கு வடக்கில் பதினாறு மைல் நீளமுள்ள அவ்வேரி முற்காலத்தில் மிக உயரமான கரைகளையுடையதாய்த் திருச்சிராப்பள்ளி, தென்னார்க் காடு ஜில்லாக்களுள் சில பகுதிகளைத் தன் நீர்வளத்தால் செழிப்பித்து நன்னிலையில் இருக்கும்படி செய்த பெருமை யுடையதாகும். தென்னார்க்காடு ஜில்லா சிதம்பரம் தாலுகாவில் இப்போது மிகப் பெரிய ஏரியாகவுள்ள வீர நாராயணன் ஏரியும் சோழகங்கம் என்னும் இவ்வேரிக்கு வடிகாலாகவே இருந்ததாம். மாளவ தேசத்து மன்னனா கிய போசனால் வடநாட்டில் இரு குன்றுகளுக்கிடையில் அமைக்கப்பெற்ற போசபுரத்து ஏரியினும் சோழ நாட் டில் மலைகளே யில்லாத நிலப்பரப்பில் மிக்க வலிமை வாய்ந்த பெருங் கரைகளுடன் நம் இராசேந்திர சோழ னால் அமைக்கப் பெற்ற சோழகங்கம் என்னும் ஏரி சிறப் பும் தொன்மையும் வாய்ந்தது என்பது உணரற்பாலது. 2 இத்தகைய பேரேரியும் அதற்கணித்தாக அமைந்திருந்த கங்கைகொண்ட சோழபுரம் என்னுந் தலை நகரும் அழிந்து தம் சிறப்பனைத்தையும் இழந்து பாழ்பட்டுக் கிடத்தற்குக் காரணம் பிற வேந்தர்களின் படையெழுச்சியும் அடாச் செயல்களுமேயாகும். 1. S. I. I., Vol. III, No. 205, Verse 124. 2. அரசியலார் இவ்வேரியைச் சீர்படுத்தினால் உணவுப்பஞ்சம் ஏற்பட்டுள்ள இக்காலத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் விளைந்து பயன் தருமென்பது திண்ணம்.