பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/215

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதல் இராசேந்திர சோழன் 185 இனி, இராசேந்திரசோழன் தன் தந்தையைப்போல் சிவ நெறியையே தனக்குரிய சமயமாகக் கொண்டவன். இவன் தன் வாழ்நாளில் சிவபெருமானிடத்தில் ஒப்பற்ற பக்தியுடையவனாய்த் திகழ்ந்தனன் என்பது இவன் தன் தலை நகராகிய கங்கைகொண்ட சோழபுரத்தில் கற்றளி யாக எடுப்பித்த ஈடும் எடுப்புமற்ற சிவாலயம் ஒன்றினால் நன்கறியப்படும். இவன், அவ்வாறு சிவபத்திச் செல்வ முடையவனாய் விளங்கியமைக்குக் காரணம், முதற் கண்டராதித்த சோழன் மனைவியார் செம்பியன்மாதேவி யாரும் இராசராச சோழன் தமக்கையார் குந்தவைப் பிராட்டியாரும் இவனை இளமையில் வளர்த்து வந்தமை யேயாம். ஒருவன் தன் இளமைப் பருவத்தில் எய்திய சிறந்த பயிற்சியும் பண்பும் அவன் வாழ்நாள் முழுமையும் நிலைபெற்றுப் பயன்படும் என்பது யாவரும் அறிந்த உண்மையேயாம். இவ்வேந்தன் தன் ஆட்சியின் எட்டாம் ஆண்டாகிய கி. பி 1019-ல் செம்பியன்மா தேவியாரின் படிமம் ஒன்று செய்வித்து அதனை நாகப்பட்டினந் தாலுகாவில் செம்பியன்மா தேவி என்னும் ஊரிலுள்ள கோயிலில் எழுந்தருளுவித்து அதன் நாள் வழிபாட்டிற்கு நிவந்தம் அளித்துள்ள செயல் ஒன்றே, இவன் சிவபக்திமிக்க அவ்வம்மையா ரிடத்தில் எத்துணை அன்பும் மதிப்பும் வைத்திருந்தான் என்பதை இனிது புலப்படுத்துவதாகும்.1 - இவனுக்குச் சைவாசாரியராக விளங்கியவர் சர்வசிவ பண்டிதர் ஆவார். இச்செய்தி, ஆசாரிய போகமாக இவருக்கு இரண்டாயிரங் கல நெல் ஆண்டுதோறும் அளிக்குமாறு இவன் செய்துள்ள ஏற்பாட்டினால் நன்கு வெளியாகின்றது. 2 அன்றியும், சிவநெறியின் அறுவகைப் பிரிவுகளுள் ஒன்றாகிய காளாமுகத்தைச் சார்ந்த லகுளீச பண்டிதரும் இவனால் ஆதரிக்கப்பட்டனர் என்று தெரிகிறது. 3 1. Ins. 481 of 1925; M. E: R. for 1926, Page 105. 2. S. I. I. Vol. II, No. 20. 3. Ins. 271 of 1927.