பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/216

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186 பிற்காலச் சோழர் சரித்திரம் இவன் சைவசமயத்தில் பெரிதும் ஈடுபாடுடையவனாய் வாழ்ந்து வந்தவனெனினும் பிற சமயங்களிடத்தில் சிறிதும் வெறுப்புடையவனல்லன். அன்றியும், புறச்சமயங்களையும் மதித்து அவற்றை அன்புடன் ஆதரித்தும் வந்தனன் எனலாம். நாகப்பட்டினத்தில் கடாரத்தரசனால் எடுப்பிக்கப் பெற்ற புத்த கோயிலுக்குப் பள்ளிச்சந்தமாக இவன் தந்தை அளித்த ஆனைமங்கலம் என்னும் ஊர் இவன் ஆட்சிக்காலத்தில்தான் சாசன மூலமாக அதற்கு வழங் கப்பட்டது. 1 இதனால், இவன் எல்லாச் சமயங்களையும் ஆதரித்து வந்தனன் என்பது இனிது விளங்குதல் காண்க. இனி, நம் இராசேந்திர சோழனுக்கு மனைவிமார் ஐவர் இருந்தனர் என்பது கல்வெட்டுக்களால் அறியப் படுகிறது. அன்னோர், முக்கோக்கிழானடிகள், 2 அரிந்தவன் மாதேவி, 3 வானவன் மாதேவி, 4 வீரமாதேவி, 5 பஞ்சவன் மாதேவி என்போர். அவர்களுள் வானவன் மாதேவிக்குத் திரிபுவனமாதேவி என்னும் மற்றொரு பெயரும் உண்டு. அவர்களுள், பட்டத்தரசியாக விளங்கியவள் யார் என்பது புலப்படவில்லை. இவ்வேந்தற்கு மக்கள் பலர் உண்டு. அவர்களுள், இவனுக்குப் பிறகு சக்கரவர்த்தியாக வீற்றிருந்து அரசாண்டவன் முதல் இராசாதிராச சோழன் ஆவன். அவனுக்குப்பிறகு அவன் தம்பிமார்களாகிய இரண்டாம் இராசேந்தின், வீரராசேந்திரன் என்போர் முறையே அரசாண்டனர். அம்மூவரும் வேள்வியில் - தோன்றும் முத்தீயைப்போல் இராசேந்திர சோழன் புதல்வர்களாகச் சிறந்து விளங்கினர் என்று கன்னியாகுமரிக் கல்வெட்டுக் 1. Ep. Ind., Vol. XXII, No. 34 2. Ins. 73 of 1921. 3. Ins. 632 of 1909. 4. S. I. I., Vol. V, No. 639. 5. Ins. 260 of 1915. 6. Ins. 464 of 1918.