பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/218

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188 பிற்காலச் சோழர் சரித்திரம் இராசேந்திர சோழன் ஆட்சிக்காலத்தில் குறுநில மன்னர் களாகவும் அரசியலில் பல துறைகளிலும் அதிகாரிகளாகவும் இருந்து தம் அரசனது ஆணையின்படி யொழுகி நாட்டிற்குப் பல்லாற்றானுந் தொண்டு புரிந்தோர் பலர் இருந்திருத்தல் வேண்டும். அன்னோருள் சிலர், கல்வெட்டுக்களிலும் செப் பேடுகளிலும் குறிப்பிடப்பட்டுள்ளனர். ஆயினும், அவர்களைப் பற்றிய செய்திகள் நன்கு புலப்படவில்லை. எனினும், கல்வெட்டுக்களின் துணைகொண்டு அறியப்பெற்ற சிலர் வரலாறுகள் மாத்திரம் ஈண்டு எழுதப்படுகின்றன. 1. விக்கிரமசோழ சோழியவரையனாகிய அரையன் இராசராசன் : இவன் சோழ மண்டலத்தில் திரைமூர் நாட்டிலுள்ள சாத்தமங்கலத்திற் பிறந்தவன்; இராசேந்திர சோழன் படைத்தலைவருள் ஒருவன் ; அரசன் ஆணையின் படி மேலைச்சளுக்கிய நாட்டின் மேல் படையெடுத்துச் சென்று வெற்றிமாலை சூடியவன் : 1 இவன் படையுடன் சென்றபோது அச்செய்தியைக் கேட்ட வேங்கி நாட்டு மன்னன் விசயாதித்தன் என்பான் ஓடியொளிந்தானென்று ஒரு கல்வெட்டு உணர்த்துகின்றது. 2 இவன் மேலைச் சளுக்கியரோடும் கீழைச்சளுக்கிய மன்னனாகிய விசயாதித்த னோடும் வங்காள மன்னன் கோவிந்தசந்தன் மகிபாலன் முதலியவர்களோடும் புரிந்த போர்களில் பெரும் புகழ்பெற்று, நால்மடி வீமன், சோழன சக்கரன், சாமந்தாபரணன், வீரபூஷணம், எதிர்த்தவர்காலன், வயிரி நாராயணன், வீர வீமன் என்னும் பட்டங்களை யுடையவனாய் விளங்கினான். இராசேந்திர சோழன் இவன்பால் எத்துணை மதிப்பு வைத் திருந்தான் என்பது இவன் எய்தியுள்ள பட்டங்களால் நன்கு புலனாகும். இவனைப்பற்றிய செய்தி இராசேந்திரனது ஆட்சியின் பத்தாம் ஆண்டுக் கல்வெட்டில் காணப்படுவதால் இவன் இவ்வேந்தனது ஆளுகையின் முற்பகுதியில் படைத் தலைவனாக நிலவியவனாதல் வேண்டும். 1. Ins. 23 of 1917. 2. Ins. 751 of 1917.