பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/227

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதல் இராசாதிராச சோழன் 197 தந்தையின் ஆட்சிக் காலத்தில் இருபத்தாறு ஆண்டுகள் வரையில் இளவரசனாயிருந்து அரசியல் துறையில் சிறந்த பயிற்சி பெற்றவன் ; பாண்டியர், சேரர், சிங்களர், மேலைச் சளுக்கியர் என்பவர்களோடு பெரும் போர் புரிந்து வெற்றி மாலை சூடிப் புகழெய்தியவன். போர்க்குணம் வாய்ந்த இத் தகைய பேரரசன் பிறவேந்தர் எல்லாம் தனக்கு அடங்கி நடத்தல் வேண்டும் என்று எண்ணுவது இயல்பேயாம். இனி, இவனது ஆட்சியின் இருபத்தேழாம் ஆண்டுக் கல்வெட்டில் காணப்படும் மெய்க்கீர்த்தி, " திங்களேர் தருதன் தொங்கல்வெண் குடைக்கீழ் நிலமகள் நிலவ மலர்மகட் புணர்ந்து செங்கோ லோச்சிக் கருங்கலி கடிந்து மன்னுபல் லூழியுள் தென்னவர் மூவருள் மானா பரணன் பொன்முடி யானாப் பருமணிப் பசுந்தலை பொருகளத் தரிந்து வீரகே ரளனை ஆனைக்கிடு வித்து அசைவில் சுந்தர பாண்டியனைத் திசைகெடத் தொல்லையில் முல்லையூர்த் துரத்தி ஒல்கலில் வேணாட் டரசைச் சேணாட் டொதுக்கி மேவுபுக ழிராமகுட மூவர் கெட முனிந்து வேலைகெழு காந்தளூர்ச் சாலை கலமறுத் தாகவ மல்லனு மஞ்சற் கேவுதன் றாங்கரும் படையால் ஆங்கவன் சேனையுள் கண்டப் பய்யனுங் கங்கா தரனும் வண்டமர் களிற்றொடு மடியத் திண்டிறல் விருதர் விக்கியும் விஜயா தித்தனுங் கடுமுரட் சாங்க மய்யனும் முதலினர் சமர பீருவொத் துடைதர நிமிர்சுடர்ப் பொன்னோ டைக்கரி புரவியொடும் பிடித்துத் தன்னா டையில் ஜயங்கொண் டொன்னார் கொள்ளிப் பாக்கை யொள்ளெரி மடுத்து