பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/233

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதல் இராசாதிராச சோழன் 203 முறை நடத்திய போர் ஆராயற்பாலதாகும். அது கி. பி. 1046-ல் நடைபெற்றிருத்தல் வேண்டும் என்பது இவனது ஆட்சியின் இருபத்தொன்பதாம் ஆண்டுக் கல்வெட்டால் புலனாகின்றது. மேலைச்சளுக்கியர்களை முற்றிலும் வென்று, அவர்களைத் தமக்குக் கீழ்ப்பட்ட குறுநில மன்னராகச் செய்தல் வேண்டும் என்பது சோழமன்னர்களின் கருத்தா தலின் அவர்களுடைய குந்தள நாட்டின் மேல் அடிக்கடி படையெடுத்துச் சென்று பெரும் போர்கள் புரிந்து நாடு நகரங்களை அழித்து வருவாராயினர். அத்தகைய போர் நிகழ்ச்சிகளுள் கி. பி. 1046-ல் நிகழ்ந்த தும் ஒன்றாகும். அப் போரில், கண்டர்தினகரன், நாரணன், கணபதி, மதுசூதனன் ஆகிய சளுக்கியத் தலைவர்கள் தம் வலி யிழந்து புறங்காட்டி ஓடிவிட்டனர். பிறகு, பல்லாரி ஜில்லா ஹாஸ்பேட்டைத் தாலூகாவிலுள்ள கம்பிலி நகரத்தி லிருந்த சளுக்கியரது மாளிகை தகர்த்தெறியப்பட்டு அங்கு இராசாதிராசனால் வெற்றித்தூணும் நிறுவப்பட்டது. 2 இவ்வேந்தன் புரிந்த அப் போர், ' கம்பிலிச் சயத்தம்பம் நட்டதும்' என்று கலிங்கத்துப்பரணியில் புகழ்ந்து கூறப் பட்டுள்ளது. மகாமண்டலேசுவரன் கண்டராதித்தராசன் என்பவன் ஒருவன் ஆகவமல்லனுக்குக் கீழ்ப்பட்ட குறு நில மன்னனாகச் சிந்தவாடி நாட்டை ஆண்டுவந்தனன் என்பது பல்லாரி ஜில்லாவிற் காணப்படும் இரண்டு கல்வெட்டுக் களால் புலப்படுகின்றது 4 அக் கண்டராதித்த ராசனே இராசாதிராச சோழனிடத்தில் தோல்வியுற்றோடிய கண்டர் தினகரனாக இருத்தல் கூடும் என்று வரலாற்று ஆராய்ச்சியில் வல்ல பேராசிரியர் ஒருவர் கருதுவது மிகப் பொருத்த முடையதேயாம். 1. S. I. I., Vol. III, No. 28. 2. Ibid, Vol. V, No. 978; Ibid, Vol. VIII, No. 199. 3. க. பரணி, இராசபாரம்பரியம், பா. 26. 4. Ins. 41 of 1904 and Ins. 711 of 1919. 5. The Colas, Vol. I, p. 305.