பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/249

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

218 பிற்காலச் சோழர் சரித்திரம் கின்றது.. அதில் இராசேந்திரன் நிகழ்த்திய முதல் மேலைச் சளுக்கியப் போர், ஈழநாட்டுப்போர், இரண்டாம் மேலைச் சளுக்கியப்போர் ஆகிய மூன்றும் சொல்லப்பட்டிருக்கின் றன. இவன், கி. பி. 1054-ல் ஆகவமல்லனுடன் கொப்பத் தில் நடத்திய பெரும்போரே முதல் மேலைச் சளுக்கியப் போராகும். இவன், தன் தமையன் இராசாதிராசன் அப் போரில் உயிர் துறந்தவுடன் போர்க்களத்திற்குச் சென்று தன் படையில் அமைதி நிலவுமாறு செய்தமையும் பின்னர் அஞ்சாநெஞ்சத்தோடு பெருவீரங்காட்டிப் போர் புரிந்து வெற்றி பெற்று, அக் குந்தள நாட்டுப் போர்க்களத்திலே முடிசூடிக் கொண்டமையும் திருச்சிராப்பள்ளி ஜில்லாவி லுள்ள திருமழபாடியிற் காணப்படும் இவன் கல்வெட் டொன்றில் வரையப்பெற்றுள்ளன. கொப்பத்தில் நடை பெற்ற அப்போர் நிகழ்ச்சிகள் எல்லாம் இராசாதிராசன் ஆட்சியில் எழுதப்பட்டிருத்தலின் ஈண்டு அவை விளக்கப் படவில்லை . நம் இராசேந்திரன் கொப்பத்துப் போர்க்களத்தில் முடி சூடிக்கொண்டனன் என்று அக்கல்வெட்டு உணர்த்தும் செய்தி, ' ஒருகளிற்றின் மேல் வருகளிற்றையொத் துலகுயக்கொளப் பொருதுகொப்பையிற் பொருகளத்திலே முடிகவித்தவன் 3.' என்று கலிங்கத்துப் பரணியிலும் ஆசிரியர் செயங்கொண் டாரால் கூறப்பட்டிருத்தல் காண்க. அன்றியும், இவ்வேந்தன் அக் கொப்பத்துப் போரில் ஆயிரம் களிறுகளைக் கைப்பற்றிக்கொண்டமை, 1. S. I. I., Vol. III, No. 29. 2. Ibid, Vol. V, No. 647. 3. கலிங்கத்துப்பரணி, இராசபாரம்பரியம், பா. 27.