பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/257

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

226 பிற்காலச் சோழர் சரித்திரம் இவன் ஆட்சியின் 12-ஆம் ஆண்டுக் கல்வெட்டொன்று ! மைசூர் இராச்சியத்தில் உளது அவ்வாண்டிற்குப் பிறகு இவன் கல்வெட்டுக்கள் யாண்டும் காணப்படாமையின் இவன் கி. பி. 1063-ல் இறந்தனன் என்பது திண்ண ம். இனி, இராசேந்திரன் காலத்துக் கல்வெட்டுக்களை ஆராயுமிடத்து, இவன் ஆட்சியில் அரசியல் அதிகாரிக ளாகவும் குறுநிலமன்னராகவும் இருந்தவர் பெயர்கள் தெளிவாகப் புலப்படுகின்றன. ஆனால், அவர்களைப் பற்றிய வரலாற்றை அறிய இயலவில்லை. எனினும், அவர்களுள் சிலரை ஈண்டுக் குறிப்பிடுதல் ஏற்புடையதே யாம். 1. மிலாடுடையான் நரசிங்கவர்மன்:-- இவன், திருக் கோவலூரி லிருந்துகொண்டு மலையமானாட்டை ஆட்சி புரிந்த ஒரு குறுநிலமன்னன். இவன் நம் இராசேந்திர னுக்குக் கப்பஞ் செலுத்திவந்தவன். இவன் ஆட்சிக் காலத்தில் தான் திருக்கோவலூரிலுள்ள திருமால் கோயில் கருங்கற் கோயிலாக எடுப்பிக்கப்பெற்றது. இவனை * நரசிங்கவர்மர் என்று அபிஷேகம் பண்ணி முடிகவித்து மிலாடு இரண்டாயிரம் பூமியும் ஆண்ட மிலாடுடையார் நரசிங்கவர்மர்' என்று திருக்கோவலூர்க் கல்வெட்டு 2 ஒன்று குறிப்பிடுவது அறியற்பாலது. 2. சேனாபதிகள் ஜயமுரி நாடாழ்வான்:- இவன் இரா சேந்திர சோழனுடைய படைத்தலைவர்களுள் ஒருவன். இவனைப்பற்றிய கல்வெட்டொன்று ஈழநாட்டில் இருத்த ஓால்3 இவன் அந்நாட்டில் போர் நிகழ்த்திய சோழர் படைத்தலைவனாதல் வேண்டும் என்பதும் சில ஆண்டுகள் அங்கு அரசப்பிரதிநிதியாக இருந்திருத்தல் கூடும் என்ப தும் நன்கறியப்படும். அரையன் இராசராசனான வீர 1. Ep. Car., Vol. IV, Hg. 115. 2. Ep. Ind., Vol. VII, No. 19 K. pp. 145 and 146. 3. S. I. I., Vol. IV, No. 1408.