பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/259

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

228 பிற்காலச் சோழர் சரித்திரம் 6. சேனாபதி சயங்கொண்டசோழ பிரமாதிராசன் :-- இவன் இராசேந்திரனுடைய படைத்தலைவர்களுள் ஒரு வன் ; அந்தணர் குலத்தினன். செங்கற்பட்டு ஜில்லா மணிமங்கலத்திலுள்ள ஒரு கல்வெட்டு 1 இவன் தாயார் காமக்கவ்வை என்பாள் அவ்வூர்க் கோயிலுக்கு இறையிலி நிலம் அளித்த செய்தியை உணர்த்துகின்றது. 7. உதயதிவாகரன் கூத்தாடியாரான வீரராசேந்திர மழவராயன் :- இவன் சயங்கொண்ட சோழ நல்லூர் என் னும் எருக்கட்டாஞ் சேரியில் வாழ்ந்துகொண்டிருந்த ஒரு தலைவன். இவன் இராசேந்திர சோழனுடைய உடன் கூட்டத்ததிகாரிகளுள் ஒருவன் என்பது இவன் அரசாங்க உத்தரவுகளில் கையெழுத்திட்டுள்ளமையால் புலனாகின் றது. III 1. S. I. I., Vol. III, No. 29. 2. Ibid, No. 21.