பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/265

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

234 பிற்காலச் சோழர் சரித்திரம் என்பது ஒருதலை. கூடல் சங்கமத்து நிகழ்ந்த அப் போரில் மேலைச்சளுக்கிய தண்டநாயகர்களாகிய கேசவன், கேத்தரையன், மாரயன், போத்தரையன், இரேச்சயன் என்போர் கொல்லப்பட்டனர். படைத்தலைவனாகிய மதுவண னும் அரச குமாரர்களாகிய விக்கிரமாதித்தன், சயசிங்கன் என்பவர்களும் மேலைச்சளுக்கிய வேந்தனாகிய ஆகவமல்லனும் எதிர்த்துப் போர் புரிய முடியாமல் புறங்காட்டி ஓடிவிட்டனர். வீரராசேந்திரன் பெரு வெற்றி எய்தி ஆகவமல்லனுடைய பாசறையை முற்றுகையிட்டு, அவன் மனைவியரையும் பட்டத்து யானையாகிய புட்பகப் பிடியையும் வராகக் கொடியை யும் யானை குதிரைகளையும் மற்றும் பல பொருள்களையும் கைப் பற்றிக் கொண்டு, வெற்றி வேந்தனாய்த் தன் தலை நகராகிய கங்கைகொண்ட சோழபுரத்தை யடைந்து, அங்கு வெற்றிமுடி சூடி விசயாபிடேகம் செய்து கொண்டான். 2 இவ்வேந்தன் ஆகவமல்லனோடு போர்புரிந்து அடைந்த வெற்றிகளுள் கூடல் சங்கமத்தில் பெற்ற வெற்றியே மிகச் சிறந்ததாகும். சயங்கொண்டார், ஒட்டக்கூத்தர் ஆகிய புலவர்பெருமக்கள் இவனைப் பற்றிக் கூறும் இடங்களில் எல்லாம் இவனது கூடல் சங்கமத்து வெற்றியையே 1. கூடல் சங்கமம் என்பது துங்கையும் பத்திரையுங் கூடும் இடத்தி லுள்ள கூடலி என்னும் ஊராக இருத்தல் கூடும் என்பது சிலர் கொள்கை, (சோழ வம்ச சரித்திரம், பக். 25) கிருஷ்ணையும் பஞ்ச கங்கையாறுகளும் கூடும் இடமே கூடல் சங்கமம் என்பது வேறு சிலர் கருத்தாகும். (Dr. Fleet's Article-Ep. Ind., Vol. XII, p. 298). மறு முறையும் போர்புரிவதற்கு அக்கூடல் சங்க மத்திற்கே வீரராசேந்திரனை ஆகவமல்லன் அழைத்தபோது இவன் கரந்தை என்னும் ஊரில் படையுடன் ஒரு திங்களுக்கு மேல் அவனை எதிர்பார்த்துக் காத்துக்கெரண்டிருந்தனன் என் பது இவன் கல்வெட்டால் அறியப்படுகிறது. ஆகவே, அக் கரந்தை என்ற ஊருக்கு அண்மையில் தான் கூடல் சங்கமம் இருந்திருத்தல் வேண்டும் என்பது திண்ணம். 2. Ep. Ind., Vol, XXI, No. 38.