பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/266

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீரராசேந்திர சோழன் 235 குறிப்பிட்டுப் புகழ்ந்திருத்தலால் அவ்வுண்மையை நன் குணரலாம். அதனை, ‘குந்தளரைக் கூடல் சங்கமத்து வென்ற கோனபயன்'1 என்னும் கலிங்கத்துப்பரணிப் பாடலாலும் - கூடலார் சங்கமத்துக் கொள்ளும் தனிப்பரணிக் கெண்ணிறந்த துங்கமத யானை துணித்தோனும் 2.' என்னும் விக்கிரமசோழன் உலாவினாலும், பாடவரிய பரணி பகட்டணிவீழ் கூடலார் சங்கமத்துக் கொண்டகோன் 3. என்னும் இராசராசசோழன் உலாவினாலும் அறிந்து கொள்ளலாம். இனி, நம் வீரராசேந்திரன் ஆட்சியின் நான்காம் ஆண் டுக் கல்வெட்டுக்கள் இவன் பொத்தப்பி வேந்தனையும் 4 கேரளனையும் ஜன நாதன் தம்பியையும் பாண்டியன் சீவல்லவன் மகன் வீரகேசரியையும் போரில் கொன்றான் என்று கூறுகின்றன. எனவே, அந்நிகழ்ச்சிகள் கி. பி. 1065-ஆம் ஆண்டில் நிகழ்ந்திருத்தல் வேண்டும். அவ் வரசர்களைப்பற்றி இப்போது ஒன்றும் புலப்படவில்லை. வீரராசேந்திரன் கல்வெட்டுக்கள் கன்னியாகுமரியிலும் 5 பாண்டிய நாட்டிலுள்ள ஆற்றூர், திருப்பத்தூர் முதலான 1. கலிங்கத்துப்பரணி. இராசபாரம்பரியம், பா. 29. ' 2. விக்கிரமசோழன் உலா, வரிகள், 42-44. 3. இராசராசசோழன் உலா, வரிகள், 49-50. 4. S. I. 1., Vol. 111. No. 20; Ep. Car., Vol. IX, cp. 85. பொத்தப்பிநாடு தொண்டைமண்டலத்திற்கு வடக்கே கடப்பை ஜில்லாவிலிருந்த ஒரு நாடு. அந்நாட்டு வேந்தன் எதற்காகக் கொல்லப்பட்டான் என்பது தெரியவில்லை. 5. Ins. 400 of 1930.