பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/268

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விரராசேந்திரசேழான் 237 நடைபெற்றது என்பது தெளிவாகப் புலப்படவில்லை. எனினும் கல்வெட்டுக்களின் துணை கொண்டு பார்க்குங் கால், அஃது ஓர் ஆற்றின் பக்கத்தில் கி, பி. 1066-ம் ஆண்டின் பிற்பகுதியில் நடைபெற்றிருத்தல் வேண்டும் என்பது உய்த்துணரப்படுகிறது. சோழர்க்கும் மேலைச் சளுக்கியர்க்கும் நிகழ்ந்த போர்கள் எல்லாம் பெரும் பாலும் துங்கபத்திரை, கிருஷ்ணை என்னும் பேராறு களின் பக்கங்களில் தான் நடந்துள்ளன, ஆகவே, நான்காம் மேலைச்சளுக்கியப் போரும் அவ்விரண்டினுள் ஒன்றின் பக்கத்தில் தான் நடைபெற்றதாதல் வேண்டும். அதில் மேலைச் சளுக்கியர் பேரிழப்பிற்கும் பெருந்துன்பத் திற்கும் உள்ளாயினர். சளுக்கிய தண்டநாயகர்களாகிய மல்லியண்ணன், மஞ்சிப்பையன். பிரமதேவன், அசோ கையன், சத்தியண்ணன், வீமய்யன், வங்காரன் என் போர் வீரராசேந்திரனால் கொல்லப்பட்டமையோடு கங் கன், நுளம்பன், காடவர்கோன், வைதும்பராயன் என் னும் அரசர்களும் அப்போரில் உயிர் நீத்தனர். அதனை யுணர்ந்ந ஆகவமல்லன் பெரிதும் வருந்திப் பழியொடு வாழ்வதினும் சாவது சால நன்று என்றெண்ணி, உள்ள முடைந்து துன்புறுவானாயினன். பிறகு அவன் ஒருவாறு தேறுதலெய்தி, மறுபடியும் வீரராசேந்திரனோடு போர் புரிந்து தனக்கு நேர்ந்த பெரும் பழியைப் போக்கக் கரு தித் தானும் தன் புதல்வரும் முன்னர்த் தோல்வியுற்ற கூடல் சங்கமத்தையே போர்க்களமாகக் கொண்டு தன் னோடு போர் புரிய வரவேண்டும் என்றும், அங்ஙனம் வாராதஞ்சியவர் மன்னவர் அல்லர் என்றும், போர்ப் பெரும் பழிப் புரட்டர் ஆவர் என்றும், ஒரு திருமுகம் எழுதி கி. பி. 1067-ல் கங்காகேத்தன் என்பவனிடம் கொடுத்து அவனை வீரராசேந்திரன்பால் அனுப்பினான். அதனைப் பெற்றுச் செய்தியுணர்ந்த இவ்வேந்தன், ' சிந்தையும் முகமுந் திருப்புயமிரண்டும் - ஏந்தெழில் உவகையோடு இருமடங்கு பொலிய' ஐந்தாம் முறை ஆகவமல்லனோடு போர் புரிவதற்கு அவன் விரும்பியவாறு பெரும் படை யுடன் கூடல் சங்கமத்திற்குச் சென்று, அதற்கணித்தாக