பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
பிற்கால சோழர் சரித்திரம்

புரிந்துவந்த அரசர் மரபினர் ஆவர். இவர்கள் எக்காலத்து இதனை ஆட்சிபுரியும் உரிமை எய்தினரென்றாதல், எவ்வேந் தரால் இதன் ஆட்சி முதலில் கைக்கொள்ளப்பட்டதென்றாதல் அறிந்துகொள்ளக்கூடவில்லை. எனவே, எவரும் ஆராய்ந்து அளந்து காண்டற்கரிய அத்துணைத் தொன்மை யுற்ற குடி யினர் இன்னோர் என்பது நன்கு தெளியப்படும். ஆகவே, இவர்கள் படைப்புக்காலந்தொட்டு மேம்பட்டு வருந் தொல் குடியினர் என்று ஓர் அறிஞர் கூறி யிருப்பது பொருத்த முடையதேயாம். இராமாயண பாரத காலங்களிலும் இவற்றிற்கு முந்திய நாட்களிலும் இவர்கள் மிகச் சிறப்புடன் விளங்கியுள்ளனர் என்பதற்குப் பல ஆதாரங்கள் காணப்படுகின்றன. அன்றியும் கி. மு. மூன்றாம் நூற்றாண்டில், மகத நாட்டில் செங்கோல் செலுத்திய அசோகச் சக்கரவர்த்தியின் ஆணையை யுணர்த்தும் கல்வெட்டுக்களிலும் சோழரைப்பற்றிய குறிப் புக்கள் உள்ளன. கி. பி. முதல் நூற்றாண்டில் மேனாட்டி னின்றும் தமிழ்நாடு போந்த யவன ஆசிரியனாகிய தாலமி என்பவனது வரலாற்றுக் குறிப்பிலும் மேனாட்டு வரலாற்று ஆசிரியன் ஒருவனால் அப்பழைய காலத்தில் எழுதப்பட்ட 'பெரிப்ளூஸ்' என்ற நூலிலும் இவர்களைப்பற்றிய உயரிய செய்திகள் காணப்படுகின்றன. எனவே, கிரேக்கரும் உரோமரும் மிக உயர் நிலையிலிருந்த நாட்களில் நம் சோழரும் அவர்களுடன் வாணிகத் தொடர்புடையவர் களாய்ப் பெருமையோடு வாழ்ந்து வந்தனர் என்பது தெள்ளிது. இத்துணைத் தொன்மையும் சிறப்பும் வாய்ந்த சோழர் குடியினர் வளம் நிறைந்த சோழமண்டலத்தைத் தமக் குரியதாகக்கொண்டு பண்டைக்கால முதல் ஆட்சிபுரிந்து வந்தமை பற்றி வளவர் என்றும் வழங்கப்பெற்றனர். இவர்களது நாடு, வானம் பொய்ப்பினும் தான் பொய்யாத


1. திருக்குறள்--குடிமை 5, பரிமேலழகர் உரைக்குறிப்பு.