பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/272

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீரராசேந்திர சோழன் 241 சோழர் ஆட்சியை ஒழித்து ஈழமண்டலம் முழுவதையும் தன் ஆளுகையின்கீழ் அமைப்பதற்குப் பெரிதும் முயன்றான். அதனையறிந்த வீரராசேந்திரன் பெரும்படையொன்றைக் கப்பல் வழியாக ஈழ நாட்டிற்கு அனுப்பினான். அப்படை அங்குச் சென்று விசயபாகுவோடு போர்புரிந்து அவனை ஓடி யொளியுமாறு செய்ததோடு அவன் மனைவியைச் சிறைப்படுத்திக் கொண்டும் அளப்பரும் பொருளுடன் திரும் பிற்று. அப்போரின் பயனாக ஈழமண்டலம் முழுவதும் வீரராசேந்திரன் ஆட்சிக்கு உள்ளாயிற்று என்று இவன் சல்வெட்டு உணர்த்துகின்றது. விசயபாகுவின் முயற்சியும் எண்ணமும் நிறைவேறாமற்போன செய்தி மகாவம்சத் தாலும் நன்கறியப்படுகின்றது. ஆனால், வீரராசேந்திரன் கல்வெட்டிற்கும் மகாவம்சத்திற்கும் ஒரு சிறு வேறுபாடு காணப்படுகிறது. வீரராசேந்திரன் விசயபாகுவை அடக்கு வதற்குக் கடல் அடையாது பல கலங்களில் ஒரு பெரும்படையைச் சோழ நாட்டிலிருந்து ஈழநாட்டிற்கு அனுப் பினான் என்று கல்வெட்டு அறிவிக்கின்றது. மகாவம்சமோ வீரராசேந்திரன் விசயபாகுவின் முயற்சியை யறிந்தவுடன் ஈழத்தில் புலத்தி நகரத்திலிருந்த தன் படைத்தலைவன் ஒருவனை ரோகண நாட்டிற்குப் பெரும்படையுடன் அனுப்பி, அவனைப் போரில் வென்று அடக்குமாறு செய்தான் என்று கூறுகின்றது. இதுவே அவ்விரண்டிற்குமுள்ள வேறுபாடாகும். விசயபாகு, சோழர் படைக்கு முன் நிற்கும் ஆற்றலின்றி ஓடி ஒளிந்தனனாயினும், சில ஆண்டுகட்குப் பிறகு ரோகணத்திலிருந்து கொண்டு ஈழமண்டலத்தின் ஆட்சியை மீண்டும் கைப்பற்றினான் என்று தெரிகின்றது. ஆகவே, அவன் வீரராசேந்திரன் படைத்தலைவன்பால் தோல்வியுற்றோடியபின் மீண்டும் வந்து அப்பகுதியில் தான் இருந்தனனாதல் வேண்டும். AUl இனி, வீரராசேந்திரனது ஆட்சியின் ஏழாம் ஆண்டுக் கல்வெட்டு, இவன் தன்கழலடைந்த ' மன்னர்க்குக் கடா ரம் எறிந்து கொடுத்தருளினான் என்று கூறுகின்றது. இவன் தந்தையாகிய கங்கைகொண்ட சோழன் கி. பி. 16