பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/273

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

242 பிற்காலச் சோழர் சரித்திரம் 1025-ல் ஸ்ரீ விஜயராச்சியத்தின்மேல் படையெடுத்துச் சென்று கடாரத்தரசனாகிய சங்கிராம விசயோத்துங்க வர்மனைப் போரில் வென்று வந்த செய்தி முன்னர் விளக்கப் பட்டுள்ளது. கி. பி. 1068-ஆம் ஆண்டில் தன்பால் அடைக் கலம் புகுந்த கடாரத்தரசன் பொருட்டு, வீரராசேந்திரன் அந்நாட்டின் மீது படையெடுத்துச் சென்று, அதனைக் கைப்பற்றி அவ்வரசனுக்கு அளித்தான். தன் நாட்டை இழந்து சோணாட்டிற்கு வந்து அடைக்கலம் புகுந்த கடார மன்னன் யாவன் என்பதும் அவன் அதனைத் தன் பகைவ னாகிய பிற நாட்டரசனிடம் இழக்க நேர்ந்ததா அன்றித் தன் தாயத்தினர்பால் இழக்க நேர்ந்ததா என்பதும் புலப்பட வில்லை எனினும், வீரராசேந்திரன் பேருதவியினால் அவன் தனக்குரிய நாட்டை மீண்டும் பெற்றமை குறிப்பிடத் தக்கது. ' வீரமே துணையாகவும் '2 என்று தொடங்கும் இவனது சிறிய மெய்க்கீர்த்தியில் தான் கடாரப் படையெழுச்சி சொல்லப்பட்டுளது. இனி, இவனது மெய்க்கீர்த்தியில், 'சோமேசுவரனைக் கன்னடதேசங் கைவிடத்துரத்தித் தன்னடி.யடைந்த சளுக்கி விக்கிரமாதித்தனை எண்டிசை நிகழக் கண்டிகை கட்டி இரட்டபாடி ஏழரை இலக்கமும் எறிந்து கொடுத்தருளி'னான் என்று கூறப்பட்டிருப்பது ஆராயற்பாலதாகும். மேலைச்சளுக்கிய மன்னனாகிய ஆகவமல்லன் கி. பி. 1068-ல் இறந்தபின்னர் இளவரசனாயிருந்த அவன் முதற்பு தல்வன் இரண்டாம் சோமேசுவரன் முடிசூட்டப் இக் கடாரப் படையெடுப்பு நிகழ்ந்தபோது வீரராசேந்திரன் நேரில் அந்நாட்டிற்குச் செல்லவில்லை ; ஆனால், சோணாட்டுப் படைத் தலைவர் சிலரை அனுப்பிப் போர் நிகழ்த்தின னாதல் வேண்டும். இவன் தங்கையின் புதல்வன் முதற் குலோத்துங்க சோழனும் இப்படையெடுப்பிற் கலந்து கொண்டு கடாரஞ் சென்று அவ்வரசனுக்கு உதவி புரிந்தான் என்று தெரிகிறது. 2. S. 1. 1., Vol. V, No. 468; Ep. Ind. Vol. XXV, p. 263.