பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/275

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

244 பிற்காலச் சோழர் சரித்திரம் அவன் சோணாட்டின் மீது படையெடுத்துச் செல்ல முயன்றபோது கோவா நகரத்திலிருந்த கடம்பர்குல மன்னன் சயகேசியும் ஆளுபவேந்தனும் அவனைப் பணிந்து உதவி புரிந்தனர் என்றும், அவற்றையறிந்த வீர ராசேந்திரன் அச்சமுற்றுத் தன் மகளை அவனுக்கு மணஞ்செய்து கொடுப்பதாக ஒரு தூதன் மூலம் தெரி விக்கவே, அவனும் உடன்பட்டுத் துங்கபத்திரைக் கரை யில் சோழமன்னன் மகளை மணந்துகொண்டான் என் றும், அதுமுதல் விக்கிரமாதித்தனும் வீரராசேந்திரனும் உறவினாற் பிணிக்கப்பெற்றனர் - என்றும் அச்சரிதம் கூறுகின்றது. அன்றியும், கடம்ப அரசனாகிய முதல் சய கேசி என்பான், தான் மேலைச்சளுக்கியர்க்கும் சோழர்க் கும் காஞ்சிமா நகரில் நட்புரிமையுண்டுபண்ணி, விக்கிர மாதித்தன் எத்தகைய இடையூறுமின்றிக் குந்தள நாட்டி லிருந்து ஆட்சி புரிந்து வருமாறு ஏற்பாடு செய்ததாகத் தன் கல்வெட்டுக்களில் குறித்துள்ளனன். அவற்றை யெல்லாம் ஆராய்ந்து பார்க்குமிடத்து ஆகவமல்லன் இறந்தபின்னர், அவன் புதல்வர்களாகிய இரண்டாம் சோமேசுவரனுக்கும் விக்கிரமாதித்தனுக்கும் முரண்பாடு ஏற்பட்டிருத்தல் வேண்டும் என்பது நன்கு வெளியாகின் றது.. அந்நாட்களில் ஆகவமல்லனுடைய மூன்றாம் புதல் வனாகிய சயசிம்மனும் கடம்ப வேந்தனாகிய சயகேசியும் விக்கிரமாதித்தனுக்கு ஆதரவளித்து உதவி புரிவாராயி னர். அவர்களுள், சயகேசி என்பான் காஞ்சிமா நகர் சென்று, நம் வீரராசேந்திரனுக்கும் விக்கிரமாதித்தனுக் கும் நட்புரிமை ஏற்படுமாறு செய்திருத்தல் வேண்டும் என்பது அவன் கல்வெட்டினால் அறியக்கிடக்கின்றது. அங்ஙனம் 1. Bombay Gazetteer, Vol. 1, Part II, p. 567. 2. | குந்தள இராச்சியத்தின் தென்பகுதியில் திரைலோக்கிய மல்லன் என்ற பட்டத்துடன் விக்கிரமாதித்தன் கல்வெட்டுக் கள் காணப்படுகின்றன. அவன் அந்நிலப் பரப்பில் தன் தமையன் சோமேசுவரன் பிரதி நிதியாகவிருந்து அரசாண்டன னாதல் வேண்டும். அன்றேல் அந்நாட்டின் வட பகுதியைச் சோமேசுவரனும் தென்பகுதியை விக்கிரமாதித்தனும் ஆட்சி புரிந்தனர் என்று கொள்ளவேண்டும்.