பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/276

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீரராசேந்திர சோழன் 245 ஏற்பட்ட நட்பின் பயனாக! வீரராசேந்திரன் இரட்டபாடி ஏழரை இலக்கத்தின்மேல் படையெடுத்துச் சென்று, இரண் டாம் சோமேசுவரனைப் போரில் வென்று துரத்திய பின்னர் அந்நாட்டை விக்கிரமாதித்தனுக்கு வழங்கியிருத்தல் வேண் டும் என்பது ஒருதலை. ஆகவே, அந்நிகழ்ச்சியைத்தான் இவன் மெய்க்கீர்த்தி மிகச் சுருக்கமாக உணர்த்துகின்றது என்பது அறியற்பாலதாகும். நம் வீரராசேந்திரன் தன் ஆட்சிக்காலம் முழுவதும் அவ்வாறு போர் நிகழ்ச்சிகளில் ஈடுபட்டிருந்தனனாயினும், தன் இராச்சியத்திலுள்ள குடிகட்கு எத்தகைய இன்னல் களுமின்றி அன்னோரைப் புரந்து வந்தமை பெரிதும் பாராட்டத்தக்கது. இவனும் தன் முன்னோர்களைப்போல் சிவபெருமானிடத்தில் பேரன்பு பூண்டு ஒழுகிவந்தனன். 2 இவன் தில்லையம்பதியில் பொன்னம்பலத்தில் எழுந் தருளியுள்ள நடராசப்பெருமானுக்கு அணிவதற்குத் திரை லோக்கியசாரம் என்ற சிறந்த முடிமணியொன்று அளித்த னன் என்று இவனது கன்னியாகுமரிக் கல்வெட்டு உணர்த்துகின்றது. அன்றியும், இவன் சோழ நாடு, பாண்டி நாடு, தொண்டைநாடு, கங்க நாடு, குலூதநாடு என்பவற்றில் மூன்று வேதங்களிலும் வல்ல நாற்பதினாயிரம் பிராமணர்கட்குப் பிரமதேயங்கள் வழங்கி, அவர்கள் அந்நாடுகளில் என்றும் நிலைபெற்று வாழுமாறு செய் தான் என்று அக்கல்வெட்டே கூறுகின்றது. இவன் ஆகவமல்லனையும் அவன் புதல்வர்களையும் கூடல் சங்க மத்துப் போரில் வென்று கைப்பற்றிய நாடாகிய இரட்ட பாடி கொண்ட சோழ மண்டலத்திலுள்ள சேராம் என்னும் அந்நட்பினால் தான் வீரராசேந்திரன் தன்மகளை விக்கிரமாதித் தனுக்கு மணஞ்செய்து கொடுத்திருத்தல் வேண்டும் என்பது ஒருதலை. ' சிவபெருமான் திருவடிகளைத் தன் தலையில் அணிந்தவன்' Ep. Ind., Vol. XXV, p. 254. 3. Travancore Archaeological Series, Vol. III, No. 34, Verse 79 4. Travancore Archaeological Series, Vol. III. No. 34, Verses 80 and 81.