பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
சோழரின் தொன்மை

காவிரியால் வளம்பெற்றுச் சிறப்பெய்தியிருந்தமையின் 'காவிரி நாடு' எனவும் 'பொன்னி நாடு' எனவும் அறிஞர் களால் பாராட்டப்பட்டது. நிலவளமும் நீர்வளமும் ஒருங்கே அமைந்துள்ளமையால் இதன் நெல் விளைவு எந்த நாட்டினரும் புகழ்ந்து கூறும் இயல்யுடையதாகும்.

* நெல்லுடையான் நீர் நாடர்கோ! ' என்ற பழம்பாடற் பகுதியும், 'மேதக்க – சோழவள நாடு சோறுடைத்து ' என்ற ஔவைப் பிராட்டியாரது திருவாக்கும் ஈண்டு நோக்கற் பாலவாகும். நெல்லுடைமையால் குடியுயர்தலும் குடியுயர் தலால் கோன் உயர்தலும் இயல்பேயாம். ஆகவே, 'வளவ னாயினும் அளவறிந்தழித்துண்' என்னும் முதுமொழியில் செல்வத்தின் மேல் எல்லைக்கோர் எடுத்துக்காட்டாகச் சோழர் குடியினர் கூறப்பெற்றிருப்பது உணரற்பாலதாகும். சுருங்கச் சொல்லுமிடத்து, செல்வ வளம்பற்றி மூவேந்த ருள்ளும் முதல் வேந்தராய்த் திகழ்ந்தவர் இவர்களே எனலாம்.

சோழர் குடியினர் சூரிய குலத்தினர் என்பது சங்கத்துச் சான்றோர் கருத்தாகும்.3 செப்பேடுகளும் கல்வெட்டுக்களும் அங்ஙனமே அறிவிக்கின்றன. இவர் களது கொடியும் இலச்சினையும் புலியுருவம் பொறிக்கப் பெற்றவையாகும். ஆத்திமாலையே இவர்கட்குரிய அடையாள மாலை என்று தொல்காப்பியம் கூறுகின்றது . இவர்கள் வீற்றிருந்து செங்கோல் செலுத்தும் பேறுபெற்ற திரு வுடைய நகரங்கள் உறையூர், காவிரிப்பூம் பட்டினம் தஞ்சாவூர், கங்கைகொண்ட சோழபுரம், பழையாறை நகர் என்பன. இவற்றுள் உறையூரும் காவிரிப்பூம் பட்டினமும்


1. யாப்பருங்கலவிருத்தி--பக். 229.2. திரு. மு. இராகவையங்கார் அவர்களது பெருந்தொகை.பக் 494 3. மணிமேகலையின் பதிகம், வரிகள் 9--12, 4. தொல். பொருள். புறத்திணையியல். சூ. 5.