பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/285

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

254| பிற்காலச் சோழர் சரித்திரம் சேந்திரன் மைத்துனனாதல்பற்றி இவனுடைய முடிசூட்டு விழாவிற்கு அவன் வந்திருத்தல் இயல்பேயாம். வீரரா சேந்திரன் தான் இறப்பதற்கு மூன்று ஆண்டுகட்கு முன்னர் கி. பி 1067-ல் தன் புதல்வனாகிய அதிராசேந்திரனுக்கு இளவரசுப் பட்டங்கட்டி அரசியலில் பயிற்சி பெற்றுவருமாறு செய்திருந்தனன் என்பது கல்வெட்டுக்களால் அறியக் கிடக்கின்றது. ஒவ்வொரு சோழ மன்னனும் தனக்குப் பிறகு பட்டம் பெறவேண்டியவன் யாவன் என்பதைத் தன் நாட்டு மக் களும் அரசியல் அதிகாரிகளாகவுள்ள பல தலைவர்களும் நன்குணர வேண்டி, அவனுக்குத் தன் ஆட்சிக் காலத்தி லேயே இளவரசுப் பட்டம் கட்டிவிடுவது அக்காலத்தில் நடைபெற்றுவந்த ஒரு வழக்கமாகும். அவ்வாறே வீரரா சேந்திரனும் செய்துள்ளமையால் இளவரசுப் பட்டம் பெற்றிருந்த அதிராசேந்திரனுக்கு முடிசூட்டுவதில் சோழ நாட்டு மக்களும் அரசியல் அதிகாரிகளும் ஒருமனப் பட்டு உவப்புடன் இருந்திருத்தல் வேண்டும் என்பது திண்ணம். ஆகவே, இவனது முடிசூட்டுவிழா உள் நாட்டில் கலகமின்றிச் சிறப்பாக நடைபெற்றிருத்தல் வேண்டும். எனவே, சளுக்கிய விக்கிரமாதித்தன் பகைவர் களை வென்று இவன் முடி சூடுவதற்கு உதவிபுரிந்தான் என்று பில்ஹணர் கூறுவது எவ்வாற்றானும் பொருந்து வதன்று. அவர் தம் நூலின் தலைவனும் தம்மைப் பேரன்புடன் ஆதரித்துக்கொண்டிருந்தவனும் ஆகிய விக்கிரமாதித்தனைச் சிறப்பிக்கவேண்டியே அச் செய்தி யைப் புனைந்துரையாகக் கூறியிருத்தல் வேண்டும். அது போலவே, அதிராசேந்திரன் சோழ நாட்டில் நிகழ்ந்த கலகத்தில் சில தினங்களுக்குள் கொல்லப்பட்டான் என்றும், மிகச் சேய்மையிலிருந்த விக்கிரமாதித்தன் தக்க சமயத்திற் சென்று தன் மைத்துனனுக்கு உதவி புரிய முடியவில்லை என்றும் அவர் தம் நூலில் சொல்லியிருப்பது ஏற்றுக்கொள்ளற்பாலதன்று. அதி ராசேந்திரன் ஆட்சியில் சோழமண்டலம் மிக அமைதி -FIL