பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/291

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

260 பிற்காலச் சோழர் சரித்திரம் விலுள்ள திருவல்லத்தில் காணப்படும் கல்வெட்டு ஒன்றில் தான் இவன் பட்டத்தரசியைப்பற்றிய குறிப்பு உளது! . அஃது அவ்வரசியின் சிறப்புப்பெயர் உலக முழுதுடையாள் என்று உணர்த்துகின்றது. அவ்வரசியைப்பற்றிய பிற செய்திகள் தெரியவில்லை. இனி, இவ்வரசன் ஆட்சிக்காலத்தில் நிலவிய அரசியல் தலைவர்களுள் சிலர் இவன் கல்வெட்டுக்களில் குறிக்கப் பெற்றிருக்கின்றனர். அன்னோரைப்பற்றிய சில செய்தி களை அடியிற்காண்க. 1. ஆதித்த தேவனான இராசராசேந்திர மூவேந்த வேளான்2 :- இவன் அதிராசேந்திரன் அரசியல் அதிகாரி களுள் ஒருவன் ; காஞ்சிபுரத்தில் திருமயானமுடையார் கோயிலிலுள்ள கங்கைகொண்டான் மண்டபத்திலிருந்து திருவல்லம், திருக்காரைக்காடு ஆகிய ஊர்களிலுள்ள கோயில்களின் கணக்குகளை இவன் ஆராய்ந்தனன் என்று காஞ்சிக் கல்வெட்டொன்று கூறுகின்றது. எனவே, இவன் அரசன் ஆணையின்படி அறநிலையங்களை ஆராய்ந்து கண்காணித்து வந்தமையோடு சில கோயில்களில் புதிய நிவந்தங்கள் அமைத்துள்ளமையும் - குறிப்பிடத்தக்க தாகும். 2. சேனாபதி இராசராசன் பர நிருப இராக்கதனான வீரசோழ இளங்கோவேளான்' :-- இவன் சோழநாட்டில் திருவிடைமருதூருக்குத் தெற்கேயுள்ள நடார் என்னும் ஊரில் வாழ்ந்த ஒரு தலைவன் ; அதிராசேந்திர சோழ னுடைய படைத்தலைவர்களுள் ஒருவன் ; அரசனால் அளிக் கப்பெற்ற பர நிருப இராக்கதன், வீரசோழ இளங்கோ வேள் என்னும் பட்டங்களையுடையவன். காஞ்சிமா நகரி 1. S. I. I., Vol. III, No. 57. 2. Ibid, Vol. VIII, No. 4. 3. Ibid, Vol. III, No. 57.