பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/300

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

270 பிற்காலச் சோழர் சரித்திரம் தொடர்வன வேலிப் படர்வன வாசியும் சுள்ளிச் சூழ்மதிற் கொள்ளிப் பாக்கையும் நண்ணற் கருமுரண் மண்ணைக் கடக்கமும் பொருகட லீழத் தரசர்த முடியும் ஆங்கவர் தேவிய ரோங்கெழின் முடியும் முன்னவர் பக்கற் றென்னவர் வைத்த சுந்தர முடியு மிந்திர னாரமும் தெண்டிரை யீழ மண்டல முழுவதும் எறிபடைக் கேரளன் முறைமையிற் சூடும் குலதன மாகிய பலர்புகழ் முடியும் செங்கதிர் மாலையும் சங்கதிர் வேலைத் தொல்பெருங் காவற் பல்பழந் தீவும் செருவிற் சினவி யிருபத் தொருகால் அரசுகளை கட்ட பரசுராமன் மேவருஞ் சாந்திமத் தீவரண் கருதி இருத்திய செம்பொற் றிருத்தகு முடியும் பயங்கொடு பழிமிக முயங்கியில் முதுகிட் டொளித்த சயசிங்க னளப்பரும் புகழொடு பீடிய லிரட்டபாடி யேழரை யிலக்கமு நவநிதிக் குலப்பெரு மலைகளும் விக்கிரம வீரர் சக்கரக் கோட்டமு முதிர்பட வல்லை மதுரை மண்டலமும் காமிடை வளை இய நாமணைக் கோணமும் வெஞ்சின வீரர் பஞ்சப் பள்ளியும் பாசடைப் பழன மாசுணி தேசமும் அயர்வில்வண் கீர்த்தி யாதிநக ரகவையிற் சந்திரன் றொல்குலத் திந்திர ரதனை விளையமர்க் களத்துக் கிளையொடும் பிடித்துப் பலதனத் தொடுநிறை குலதனக் குவையும் சிட்டருஞ் செறிமிளை யொட்ட விஷயமும் பூசுரர் சேருநற் கோசல நாடும் தன் D பாலனை வெம்முனை யழித்து வண்டுறை சோலைத் தண்ட புத்தியும் இரண சூரனை முரணறத் தாக்கித் திக்கணை கீர்த்தித் தக்கண லாடமும் கோவிந்த சந்தன் மா விழிந் தோடத் தங்காத சாரல் வங்காள தேசமும்