பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/302

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

272 பிற்காலச் சோழர் சரித்திரம் தன் றிருப் புதல்வர் தம்மையுந் துன்றெழில் வானவன் வில்லவன் மீனவன் கங்க னிலங்கையர்க் கிறைவன் பொலங்கழற் பல்லவன் கன்னகுச் சியர்கா வலனெனப் பொன்னணி சுடர்மணி மகுடஞ் சூட்டிப் படர்புக மாங்கவர்க் கவர்நா டருளிப் பாங்குற மன்னுபல் லூழியுட் டென்னவர் மூவருள் மானா பரணன் பொன்முடி யானாப் பருமணிப் பசுந்தலை பொருகளத் தரிந்து வாரள வியகழல் வீரகே ரளனை முனை வயிற் பிடித்துத் தனது வாரணக் கதக்களிற்றினா லுதைப்பித் தருளி அந்தமில் பெரும்புகழ்ச் சுந்தர பாண்டியன் கொற்றவெண் குடையுங் கற்றைவெண் கவரியும் சிங்கா தனமும் வெங்களத் திழந்து தன் முடிவிழத் தலைவிரித் தடிதளர்ந் தோடத் தொல்லை முல்லையூர்த் துரத்தி யொல்கலில் வேணாட் டரசைச் சேணாட் டொதுக்கி மேவுபுக ழிராமகுட மூவர்கெட முனிந்து மிடல்கெழு வில்லவன் குடர்மடிக் கொண்டு தன் நாடு விட் டோடிக் காடுபுக் கொளிப்ப வஞ்சியும் புதுமலர் மலைந்தாங் கெஞ்சலில் வேலைகெழு காந்தளூர்ச் சாலை கலமறுத் தாகவ மல்லனு மஞ்சற் கேவு தன் தாங்கரும் படையா லாங்கவன் சேனையுட் கண்டப் பயனும் கங்கா தரனும் வண்டமர் களிற்றொடு மடியத் திண்டிறல் விருதர் விக்கியும் விசயா தித்தனுங் கருமுரட் சாங்க மய்யனு முதலியர் சமர பீருவொத் துடைய விரிசுடர்ப் பொன்னோ டைக்கரி புரவியொடும் பிடித்துத் தன்னா டையிற் சயங்கொண் டொன்னார் கொள்ளிப் பாக்கை யுள்ளெரி மடுப்பித் தொருதனித் தண்டாற் பொருகட லிலங்கையர் கோமான் விக்கிரம பாகுவின் மகுடமும் முன் றனக் குடைந்த தென்றமிழ் மண்டல முழுவ தும்மிழந் தெழுகட லீழம்