பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/316

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

286 பிற்காலச் சோழர் சரித்திரம் பாரோர்முழுதும் வந்திறைஞ்சப் பதஞ்சலிக் காட்டுகந்தான் வாரார்முலையாண் மங்கைபங்கன் மாமறையோர் வணங்கச் சீரான்மல்கு தில்லைச்செம்பொ னம்பலத் தாடுகின்ற காரார்மிடற்றெங் கண்டனாரைக் காண்பது மென்றுகொலோ. (6) இலையார்கதிர்வே லிலங்கைவேந்த னிருபது தோளுமிற மலைதானெடுத்த மற்றவற்கு வாளொடு நாள் கொடுத்தான் சிலையாற்புரமூன் றெய்தவில்லி செம்பொனி னம்பலத்துக் கலையார்மறிபொற் கையினானைக் காண்பது மென்றுகொலோ. (7) வெங்கோல்வேந்தன் றென்னனாடு மீழமுங் கொண்டதிறற் செங்கோற் சோழன் கோழிவேந்தன் செம்பியன் பொன்னணிந்த அங்கோல்வளையார் பாடியாடு மணிதில்லை யம்பலத்துள் எங்கோனீச னெம்மிறையை யென்றுகொ லெய்துவதே. (8) நெடியானோடு நான்முகனும் வானவரு நெருங்கி முடியான் முடிகண் மோதியுக்க முழுமணி யின்றிரளை அடியாரலகி னாற்றிரட்டு மணிதில்லை யம்பலத்துக் கடியார்கொன்றை மாலையானைக் காண்பது மென்றுகொலோ. (9) சீரான்மல்கு தில்லைச்செம்பொ னம்பலத் தாடி. தன்னைக் காரார்சோலைக் கோழிவேந்தன் றஞ்சையர் கோன் கலந்த ஆராவின்சொற் கண்டராதித்த னருந்தமிழ் மாலைவல்லார் பேராவுலகிற் பெருமையோடும் பேரின்ப மெய்துவரே. (10)