பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
சோழர் நிலை

7

இவர்கள் பல்லவர்க்குத் திறைசெலுத்தும் குறு நில மன்னரா யிருந்தனர் என்பது தேற்றம்.

சோழர் அந்நிலையிலிருந்த நாட்களில் பண்டைத் தலை நகரங்களாகிய உறையூர், காவிரிப்பூம்பட்டினம் என்ப வற்றில் தங்கி வாழ்ந்துவந்தனர் என்பதற்குத் தக்க சான்றுகள் இல்லை. ஆகவே, இவர்கள் வேறு ஒரு நகரத் தில்தான் இருந்திருத்தல் வேண்டும். வரலாற்று ஆராய்ச்சி யாளருள் சிலர், கோனாட்டின் தலை நகராகிய கொடும்பாளூரில் அந்நாட்களில் இவர்கள் தங்கியிருந்தனர் என்று கூறு கின்றனர்; மற்றுஞ் சிலர் இவர்கள் உறையூர்ப் பக்கத்தில் இருந்திருத்தல் வேண்டும் என்கின்றனர். இவற்றை யெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. கோனாடு என்பது புதுக்கோட்டை இராச்சியத்தில் முற்காலத்தி லிருந்த ஒரு நிலப்பரப்பாகும். அது, சோழ மண்டலத் திற்கும் பாண்டி மண்டலத்திற்கும் இடையில் அமைந் திருந்த ஒரு சிறு நாடு எனலாம். அந்நாட்டிலிருந்த கொடும்பாளூரில் இருக்குவேள் என்ற குடியினர் இருந்தனர் என்பதும் அவர்கள் சிலகாலம் பாண்டியர்க்கும் சிலகாலம் பல்லவர்க்கும் அடங்கித் திறை செலுத்திக்கொண்டு குறுநில மன்னராயிருந்து வந்தனர் என்பதும் - சில கல்வெட்டுக் களால் புலப்படுகின்றன . அவர்கள் கடைச்சங்க நாளில் வாழ்ந்த இருங்கோவேளின் வழியினர் ; சோழ மரபினர் அல்லர். எனவே, கொடும்பாளூரில் இருவேறு குறு நில மன்னர் ஆட்சிபுரிந்து கொண்டிருந்தனர் என்று கொள்வது எவ்வாற்றானும் ஏற்புடையதன்று. ஆகவே, சோழர் குறு நில மன்னராயிருந்த காலத்தில் கொடும்பாளூரில் இருந்திலர் என்பது திண்ணம்.

இனி, சைவ சமய குரவருள் ஒருவராகிய திருநாவுக்


1. 2. The Colas, Vol. II, p. 131. Annual Report on South Indian Epigraphy for 1927, part II, para 73, Inscriptions of the Pudukkottai State, No. 14.