பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
முதல் ஆதித்த சோழன்

29

செங்கற்பட்டு ஜில்லா திருமால்புரத்தில் காணப்படும் கல்வெட்டொன்று, ஆதித்த சோழன் திருமாற்பேற்றிறை வனுக்குத் தன் ஆட்சியின் இருபத்தொன்றாம் ஆண்டில் தேவதானமாக நிலம் அளித்தனன் என்றும் அஃது இவன் மகன் முதற் பராந்தக சோழனது ஆட்சியின் நான்காம் ஆண்டில் இறையிலியாக அரசாங்க வரிப்புத்தகக் கணக் கில் எழுதப்பட்டதென்றும் கூறுகின்றது 1. ஆகவே, அதித்தன், தன் ஆட்சியின் இருபத்தொன்றாம் ஆண் டிற்கு முன்னரே அபராஜிதவர்மனை வென்று தொண்டை மண்டலத்தைக் கைப்பற்றி யிருத்தல்வேண்டும். அபரா ஜிதவர்மன் கல்வெட்டுக்களும் அவனது ஆட்சியின் பதி னெட்டாம் ஆண்டிற்குப் பிறகு தொண்டை மண்டலத்தில் யாண்டும் காணப்படவில்லை . இதனைக் கூர்ந்து ஆராயு மிடத்து, கி. பி. 891-ஆம் ஆண்டிலாதல் அதற்கடுத்த ஆண்டிலாதல் ஆதித்தன் அபராஜிதவர்மனை வென்று. தொண்டைமண்டலத்தைக் கைப்பற்றித் தன் ஆட்சிக்கு உட்படுத்தியிருத்தல் வேண்டும் என்பது நன்கு வெளியா கின்றது. யானைமேலிருந்து கொண்டு போர்புரிந்த அப ராஜிதவர்மன்மீது ஆதித்தன் பாய்ந்து அவனைக் கொன் றான் என்று கன்னியாகுமரிக் கல்வெட்டு உணர்த்துகின் றது. தொண்டைமண்டலத்தை ஆதித்தன் கைப்பற்றிய பின்னர், அபராஜிதவர்மனைப்பற்றிய செய்திகளே கிடைக்க


1. ' இப்புரவும் இரவும் பொன்னுந் தேவர்க்கு இறுப்பதாக இக்கோட்டத்துப் புரிசை நாட்டுப் பிரமதேயம் புதுப்பாக்கத்துச் சபையார்க்குத் தேவதான பிரமதேசமாகத் தொண்டை மானாற் றூர்த்துஞ்சின உடையார்க்கு இருபத் தொன்றாவது கொடுத்து இருபத் திரண்டாவது பிடாகை நடந்து சாசனம் செய்து கொடுத்து வரியிலிடாதேகிடந்த இவ்வூரை மதுரையும் ஈழ முங்கொண்ட கோப்பரகேசரிவர்மருக்கு யாண்டு நாலாவது தேவ தான பிரமதேயமாக வரியிலிட்ட இதனால் புரவும் இரவும் பொன்னும் புதுப்பாக்கத்துச் சபையாரே தேவர்க்கு இறுத்து வரா நின்றார்கள்.'- (S. I. I. Vol, III, No. 142) 2. The Pallavas by G. J. Dubreuil, p. 82. 3. Travancore Archaeological Series, Vol. III, No. 34, Verse 55.