பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30

பிற்காலச் சோழர் சரித்திரம்

வில்லை. ஆதலின், அக்கல்வெட்டுச் செய்தி ஒருகால் உண்மையாயிருப்பினும் இருக்கலாம்.

இந்நாளில் தில்லைத்தானம் என்று வழங்கும் திரு நெய்த்தானத்திலுள்ள இவன் கல்வெட்டொன்று, இவனைத் தொண்டைநாடு பரவின சோழன் இராசகேசரிவர்மன் என்று குறிப்பிடுவதும் 1 இவன் தொண்டைமண்டலத்தை வென்று தன்னடிப்படுத்தியதையே உணர்த்துவதாகும்.

அன்றியும், பல்யானைக் கோக்கண்டனான ஆதித்த சோழனும் சேரமான் தாணுரவியும் அந்நாளில் உற்ற நண்பர்களாக இருந்தனர் என்பதும் இருவரும் சேர்ந்து விக்கியண்ணன் என்ற தலைவன் ஒருவனுக்கு அவன் புரிந்த அருந்தொண்டைப் பாராட்டிச், ' செம்பியன் தமிழ வேள் ' என்ற பட்டமும் தவிசும் சாமரையும் சிவிகையும் திமிலையும் கோயிலும் இறையிலி நிலமும் எக்காளமும் களிற்று நிரையும் வழங்கினார்கள் என்பதும் அத்திரு நெய்த்தானக் கல்வெட்டால் வெளியாகின்றன. சோழ மன்னனும் சேரமன்னனும் ஒருங்கு சேர்ந்து பட்டம் வழங்கிப் பாராட்டுமாறு விக்கியண்ணன் புரிந்த அரிய தொண்டு யாது என்பதை அக்கல்வெட்டு அறிவிக்க வில்லை. எனினும், அவனுக்கு வழங்கப்பெற்ற பட்டம் * செம்பியன் தமிழவேள்' என்று சொல்லப் படுவதால் அவன் ஆதித்தனுக்கு உதவி புரிந்தமைபற்றி அப்பட்டம் பெற்றிருத்தல் வேண்டும். அங்ஙனமாயின், ஆதித்தன் போர்புரிந்து தொண்டை மண்டலத்தையாதல் கொங்கு மண்டலத்தையாதல் கைப்பற்றிய காலத்தில் விக்கியண் ணன் என்ற தலைவன் படையுடன் வந்து இவனுக்குச் சிறந்த உதவி புரிந்திருத்தல் வேண்டும் என்பது திண் ணம்,

இனி, ஆதித்தன் கொங்கு மண்டலத்தின்மீது படை யெடுத்துச்சென்று அதனைக் கைப்பற்றிக் 'கொண்டான்


1. S. I. I., Vol. III, No. 89.