பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிற்காலச் சோழர் சரித்திரம் இராச சிம்மனோடு வெள்ளூரில் நிகழ்த்திய இப்போர் கி. பி. 919-ஆம் ஆண்டில் நடைபெற்றிருத்தல் வேண்டும் என்பது கீழைப் பழுவூரிலும் திருப்பாற்கடல் என்ற ஊரிலும் காணப்படும் இரு கல்வெட்டுக்களால் அறியக்கிடக்கின்றது 1. இப்போர் நிகழ்ச்சியே பராந்தகன் பாண்டி நாடு முழுமையும் கைப்பற்றுவதற்குப் பெரிதும் ஏதுவாக இருந்தது எனலாம். பாண்டி நாட்டில் பராந்தகனது கல்வெட்டுக்கள் இவனது ஆட்சியின் இருபத்து நான்காம் ஆண்டுமுதல் தான் காணப் படுகின்றன 2. ஆகவே, இவன் உள் நாட்டுக் குழப்பங்களை யும் கலகங்களையும் அடக்கி அந்நாடு முழுமையும் தன் ஆட்சி யின் கீழ் அமைத்தற்கு அத்துணையாண்டுகள் ஆயின என்பது அறியத்தக்கது. இராச்சியத்தை இழந்த இராச சிம்ம பாண்டியன் சிங்க ளத்திற்குச் சென்று அந்நாட்டரசனாகிய நான்காம் தப்பு லன்பால் (கி. பி. 923-934) உதவிபெறுமாறு அங்குத் தங்கியிருந்தான். சோழனோடு போர்புரிந்து பாண்டி நாட்டைப் பெற்று அவனுக்கு அளிப்பதாக உறுதி கூறிய சிங்கள மன்னனும் அவ்வாறு உதவாமைகண்டு, அங்குத் தனக்குச் செய்யப்படும் பேருபசாரங்களைப் பெற்றுக்கொண்டு வாளாத் தங்கியிருப்பதால் ஒரு பயனுமில்லை என்பதை யுணர்ந்த இராச சிம்மன், தன் முன்னோர்களிடமிருந்து தனக்குக் கிடைத்த சுந்தர முடியையும் பிற அரசச் சின்னங் களையும் அவ்வேந்தன்பால் அடைக்கலப் பொருளாக வைத்துவிட்டு, தன் தாய் வானவன்மாதேவியின் பிறந்தக மாகிய சேர நாட்டிற்குச் சென்று அங்கு வசித்துவந்தான். 3 1. Ins. 231 of 1926 ; S. I. I., Vol. III, No. 99. 2. S. 1. I., Vol, II, No. 101 : Mysore Gazetteer, Vol. II part II, page 918. 3. பாண்டியர் வரலாறு-பக், 37.