பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதற் பராந்தக சோழன் 41 பராந்தக சோழன், பாண்டி நாடு முழுமையும் தன் ஆட் சிக்குட்படுத்திய பின்னர், அந்நாட்டின் தலை நகராகிய மதுரையில் முடிசூட்டுவிழா நடத்துவதற்கு முயன்ற போது பாண்டியர்க்குரிய முடியும் பிற அரசச் சின்னங் களும் அங்குக் காணப்படவில்லை. அவை யனைத்தும் நாட்டை விட்டுச்சென்ற இராசசிம்ம பாண்டியனால் இலங் கைக்குக் கொண்டுபோகப்பட்டு அந்நாட்டு வேந்தனிடம் கொடுக்கப்பட்டுள்ளன என்பதை அறிந்த பராந்தகன், அவற்றை வாங்கிவருமாறு சில தூதர்களைச் சிங்கள நாட்டிற்கு அனுப்பினான். ! அக்காலத்தில் அந்நாட்டில் அரசாண்டுகொண்டிருந்த நான்காம் உதயன் என்பான் அவற்றைக் கொடுக்க மறுக்கவே, பராந்தகன் அவன் நாட்டின்மீது படையெடுத்துச்சென்று அவற்றைத் தன் ஆற்றலால் கைப்பற்றிக் கொண்டுவரவேண்டும் என்று கருதினான். அதுபற்றியே ஈழ நாட்டிற்குப் பெரும்படை யொன்று அனுப்பப்பெற்றது. அந்நாட்டில் நடைபெற்ற போரில் ஈழ நாட்டுப் படைத்தலைவன் இறந்தான். பராந் தகன் படை வெற்றி யெய்தவே, சிங்கள வேந்தனாகிய உதயன், வேறுவழியொன்றும் அறியாதவனாய்ப் பாண் டியன் கொடுத்துச்சென்ற முடியையும் பிறவற்றையும் எடுத்துக்கொண்டு இலங்கையின் தென்கீழ்ப் பகுதி யாகிய ரோகண நாட்டிற்குப் போய்விட்டான். 2 சோணாட் டுப்படை அவற்றைக் கைப்பற்ற முயன்றும் அங்குச் செல்ல முடியாமல் தன் நாட்டிற்குத் திரும்பிற்று. இவ் வரலாற்றை மகாவம்சத்தில் காணலாம். பராந்தகன் ஈழ நாட்டுப் போரில் வெற்றி எய்தியும் தன் விருப்பத்தை நிறைவேற்ற இயலவில்லை. 3 இவனது ஆட்சியின் 37ஆம் ஆண்டுக் கல்வெட்டுக்கள் இவனை ' மதுரையும் ஈழ 1. The Colas, Vol. I, pp. 147 and 148. 2. Ibid, p. 148 (மகாவம்சக் குறிப்பு). 3. பராந்தக சோழனது விருப்பம் பிற்காலத்தில் முதல் இரா சேந்திர சோழனால் நிறைவேற்றப்பட்டது என்பதை அவன் மெய்க் கீர்த்தியால் உணரலாம்.