பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதற் பராந்தக சோழன் தமக்கையின் கணவனும் கங்க நாட்டு வேந்தனு மாகிய பூதுகன் என்பான், அச்செய்தியை யறிந்து பெரும் படையுடன் கிருஷ்ண தேவனுக்கு உதவி புரிய வந்தான் 1. இரு பகுதியினர்க்கும் இராஷ்டிரகூட நாட் டில் கி. பி. 940-ன் ஆரம்பத்தில் பெரும்போர் நடைபெற் றது. அப்போரில் கோவிந்தனுக்கு உதவிபுரியச் சென்ற சோணாட்டுப் படை தோல்வியுறவே, முன்றாம் கிருஷ்ண தேவன் வெற்றிபெற்று இராஷ்டிரகூடச் சிங்காதனத் தைக் கைப்பற்றினான் 2. அவனது ஆட்சியும் கி. பி. 968 வரையில் இரட்ட மண்டலத்தில் நடைபெற்றது என்பது அந் நாட்டில் காணப்படும் அவன் கல்வெட்டுக்களாலும், செப்பேடுகளாலும் அறியப்படுகின்றது 3. பராந்தக சோழன் மருகனாகிய நான்காம் கோவிந்தனைப்பற்றிய செய்திகள் அப்போருக்குப் பிறகு கிடைக்கவில்லை. பராந்தக சோழன் தன் மருகன் பொருட்டுச் செய்த முயற்சி யின் பயனாக இவனுக்கு மூன்றாம் கிருஷ்ண தேவன் பெரும் பகைவனானான் ; அவனது ஆட்சியும் இரட்ட மண்ட லத்தில் நிலைபெறுவதாயிற்று. அன்றியும், கங்க நாட் டரசனாகிய இரண்டாம் பூதுகனும் மூன்றாங் கிருஷ்ண தேவன்பால் நெருங்கிய உறவும் நட்பும் பூண்டு அவ னுக்கு உற்றுழி யுதவும் நிலையில் இருந்தான். பராந் தகன்பால் தம் நாடுகளை இழந்து வருந்திய வாணரும் வைதும்பரும் மூன்றாம் கிருஷ்ண தேவனிடம் அடைக் கலம் புகுந்து அவனால் ஆதரிக்கப்பெற்று இரட்ட மண்ட லத்தில் தங்கியிருந்தனர். அந்நிலையில் பராந்தகன்பால் பெருமதிப்பு வைத்துப் பேரன்புடன் ஒழுகி வந்தவனும் கங்க நாட்டின் தென் பகுதியை ஆட்சிபுரிந்து கொண் டிருந்தவனுமாகிய இரண்டாம் பிருதிவிபதி என்பான் 1. Ep. Ind., Vol. XXVI, page 232. 2. கி. பி. 940 முதல் மூன்றாம் கிருஷ்ணன் செப்பேடுகள் அந் நாட்டில் காணப்படுவதால் அவன் வெற்றியெய்தி முடிசூடினான் என்பது நன்கு தெளியப்படும். (Deoli Plates of Krishna III; Ep. Ind., Vol. V. No. 20.) 3. The Rashtrakutas and Their Times, pp. 117 and 122.