பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதற் பராந்தக சோழன் கிய இராசாதித்தன் தன் தந்தை விரும்பியவாறு அவ் வூரில் சில ஆண்டுகள் தங்கிச் சோழ இராச்சியத்தின் வடபகுதியைக் காத்து வந்தனனாதல் வேண்டும் 1. அந் நாட்களில் தான் அவனுடைய படை வீரர்களும் பணிமக் களும் அக்கோயிலுக்குப் பல நிவந்தங்கள் அளித்திருத் தல் வேண்டும் என்பது திண்ணம். அவ்வூர்க்கண்மை யில் பெண்ணை யாற்றங்கரையிலுள்ளதும் இந்நாளில் கிராமம் என்று வழங்கிவருவதும் ஆகிய முடியூரில் இரா சாதித்தன் படைத் தலைவனும் சேர நாட்டு நந்திக்கரைப் புத்தூரினனும் ஆகிய வெள்ளங் குமரன் என்பவன் கி. பி. 936-ஆம் ஆண்டில் தன் படையுடன் தங்கியிருந் தனனென்று அவ்வூரிலுள்ள ஒரு கல்வெட்டு 2 உணர்த்து கின்றது. அப்படைத் தலைவனே, கி. பி. 943-ஆம் ஆண்டில் அவ்வூரில் ஆற்றுத்தளி என்ற சிவன் கோயில் ஒன்று 2 எடுப்பித்தான் என்று மற்றொரு கல்வெட்டு அறிவிக்கின் றது. 3 அன்றியும், பராந்தகன் புதல்வருள் ஒருவனும் இராசாதித்தன் தம்பியுமாகிய அரிகுலகேசரி என்னும் அரசகுமாரன் அந்நாட்டில் படையோடு தங்கியிருந்தனன் என்பது திருக்கோவலூரிலுள்ள கல்வெட்டுக்களால் புலனா கின்றது. 4 இவற்றை யெல்லாம் ஆராய்ந்துண்மை காணுமிடத்து, வடபுலத்திலிருந்து பகைவர் படை யெடுத்து வருதல் கூடும் என்பதைப் பராந்தகன் நன் குணர்ந்து, அதனைத் தடுத்துத் தன் இராச்சியத்தைப் பாதுகாக்கவேண்டியே இத்தகைய ஏற்பாடுகள் செய் திருந்தான் என்பது தெளிவாக விளங்குதல் காண்க. எனினும், காலப்போக்கில் நிகழ்வனவற்றை இவ்வுலகில் யாவர் தாம் தடுக்க முடியும்? ஆகவே, காலச் சக்கரத் தின் சுழற்சியினால் நிகழ்வன நிகழ்ந்தே தீரும் என்பது 1. Ins. 363 of 1902 ; Ep. Ind., Vol. VII, pages 134 aud 135. 2. Ins. 739 of 1905. 2a, தடு நாட்டில் திருநாவுக்கரசு அடிகளால் பாடப்பெற்ற திருமுண்டீச்சரம் என்னுந் திருக்கோயில் இதுவேயாம். 3. Ins. 735 of 1905 ; Ep. Ind., Vol. VIII, page 261. 4. Ins. 280 of 1902; Ep. Ind., Vol. VII, No. 20 E & F