பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 பிற்காலச் சோழர் சரித்திரம் னுடன் வந்த தலைவர்கட்கு அளித்ததோடு இலங்கை வேந் தன் முதலான அரசர்கள் பால் கப்பம் பெற்று இராமேச் சுரத்தில் வெற்றித்தூண் ஒன்று நிறுவினான் என்றும் கூறுகின்றன 1. புதுச்சேரிக்கண்மையிலுள்ள வாகூருக்கும் தென்னார்க்காடு ஜில்லாவில் பண்ணுருட்டிக்கருகிலுள்ள திருவதிகை வீரட்டானத்திற்கும் தெற்கே மூன்றாங் கிருஷ்ணதேவன் கல்வெட்டுக்கள் எவ்விடத்தும் காணப் படாமையால், அவன் தஞ்சையைக் கைப்பற்றியமையும் பிறவும் வெறும் புனைந்துரைகளேயன்றி உண்மைச் செய்தி கள் ஆகமாட்டா. அவன் தன்னுடன் வந்த சில தலைவர் கட்குச் சோழர் ஆட்சிக்கு உட்பட்டிருந்த தொண்டை நாட்டி லும் திருமுனைப்பாடி நாட்டிலும் சில பகுதிகளைக் கொடுத்தி ருத்தல் கூடும். எனவே, அவன் தக்கோலத்தில் சோழரை வென்று அவ்விரு நாடுகளையும் கைப்பற்றித் தன் ஆட்சிக் குள்ளாக்கிய வரலாற்றையே அச்செப்பேடுகள் மிகைப் படுத்திக் கூறுகின்றன என்பது தெள்ளிது. ஆயினும், இப்போர் நிகழ்ச்சியால் சோழ இராச்சியம் சுருங்கிய நிலையை எய்திற்று எனலாம். சோழர் பேரரசும் தன் உயர் நிலையினின்றும் சிறிது வீழ்ச்சியடைந்தது என்பதில் ஐயமில்லை . இனி, பராந்தக சோழனது ஆட்சியின் 46-ஆம் ஆண்டுக் கல்வெட்டுக்கள், சோழநாட்டில் கண்டியூர், திருச்சோற்றுத் துறை ஆகிய ஊர்களில் காணப்படுகின்றன. 2 அவ் வாண்டிற்குப் பிறகு இவன் கல்வெட்டுக்கள் யாண்டும் கிடைக்கவில்லை. ஆகவே, இவன், எஞ்சியிருந்த சோழ இராச்சியத்தைச் சில ஆண்டுகள் வரையில் ஆட்சி புரிந்து கி. பி. 953-ல் இறந்தனனாதல் வேண்டும். இவன் தன் முதல் மகனும் பெரு வீரனுமாகிய இராசாதித்தனைத் தன் ஆட்சியின் இறுதியில் போரில் இழக்க நேர்ந்தமை, 1. Ep. Ind., Vol. IV, p. 280 2. S. I. 1., Vol. V, No. 570; Ins. 135 of 1931, Annual Report on South Indian Epigraphy for 1931, Part II, Para 7.