பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏழாம் அதிகாரம் அரிஞ்சய சோழன் கி. பி. 956 - 957 கண்டராதித்தனுக்குப் பின்னர் அவன் தம்பியும் இளவரசுப்பட்டங் கட்டப் பெற்றிருந்தவனுமாகிய அரிஞ் சயன் முடிசூட்டப் பெற்றான். இவனை அரிந்தமன் என் றும் அரிகுலகேசரி என்றும் அந்நாளில் வழங்கியுள்ளனர் என்பது சில கல்வெட்டுக்களால் அறியக் கிடக்கின்றது . இவன் முதற் பராந்தக சோழனுடைய மூன்றாம் புதல்வன் ; அவ்வேந்தற்குக் கேரள அரசனான பழுவேட்டரையன் மகள் பாற் பிறந்தவன்' ; பேராற்றல் படைத்த பெருவீரன் என்று ஆனைமங்கலச் செப்பேடுகளில் புகழ்ந்துரைக்கப் பெற்றவன் ; பரகேசரி என்ற பட்டமுடையவன். இவன், தன் தமையன் இராசாதித்தன் சோழ இராச்சியத்தின் வடபகுதியைப் பாது காத்துக் கொண்டிருந்த காலத்தில் அவனுக்கு உதவிபுரிதற் பொருட்டு மலையமானாட்டின் தலை நகராகிய திருக்கோவ லூரில் பெரும் படையுடன் தங்கியிருந்தான் 4 . எனவே, சோழர்க்கும் இராஷ்டிர கூடர்க்கும் பராந்தகன் ஆட்சியில் நிகழ்ந்த பெரும்போரில் இவனும் கலந்து கொண்டிருத்தல் வேண்டும் என்பது திண்ணம். இவன் சோழ நாட்டில் சக்கரவர்த்தியாக முடி சூடிய பிறகு, தன் தந்தை யாட்சியின் இறுதியில் இராஷ்டிர கூட மன்னன் மூன்றாங் கிருஷ்ணதேவன் கவர்ந்து கொண்ட தொண்டை நாட்டையும் திருமுனைப்பாடி நாட்டையும் திரும்பக் கைப்பற்றவேண்டும் என்ற எண்ணங்கொண்டு அதற்குரிய முயற்சிகளைச் செய்யத் தொடங்கினான். அவ்விரு 1. S. I. I., Vol. VI, Nos. 31 and 32; Kanyakumari Inscription of Virarajendra, Verse 61. 2. Ep. Ind., Vol. XV, No. 5 Verses 22 and 23. 3. Ibid, Vol. XXII, No. 34 Verse 23. 4. Ibid, Vol. VII, page 141.