பக்கம்:பிள்ளைக்கலி.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# 05 தீருங்கள். நல்ல தீர்ப்பு நவிலுங்கள்!' என்று வேண்டிக் கொண்டாள் காமக்கோட்டி. ஆகட்டும். நீ வீணே பதட்டப்படாதே!” - ஆறுதல் மொழி தந்தார் பிஞ்ஞகன். 'நன்றி! ஆனல்... ??? 'ஐயப்பாடா?* 'அல்ல. ஆனால், அந்தக் குழந்தையின் பெற்ருேர்கள் ?... ஈரைந்து மாதம் சுமந்து பெற்ற அந்த அன்னே...?” என்று எதிர் விஞ விடுக்கலானுள் நாரி. . பிறப்பிலி பெருமூச்செறிந்தார். 'பூலோகத்தில் காதலுக்குப் புதுமாதிரியான பொருள்: கலியாணத்துக்கு முன்னும், கலியாணத்துக்குப் பின்னும்கூடக் "காதல்’ என்றஒன்று உதயமாவதே கிடையாது. ஆளுல், அவர்கள் வாய் என்னவோ, எல்லாம் உணர்ந்த மாதிரி, எடுத்ததற்கெல் லாம் காதல், இன்றேல் சாதல்!” என்ற ஒரே பல்லவியைத்தான் பாடித் தொலைக்கிறது. பூலோகக் காதலைத் தேவலோகக் காதலாக ரசாயன மாற்றம் செய்வதாக உறுதி சொன்னன் அவன்-ஆம்ாம்; இந்தக் குழந்தையின் தகப்பன். அவள் பிள்ளைக் கனியின் தாய் உண்மையென்று நம்பிளுள். உயிரும் உயிரும் ஒன்ருயின. உடலும் உடலும் முதல் இரவு விழாவைக் கோலா கலமாகக் கொண்டாடின. இருள் சிரித்த அந்தக் காட்டிலே பூலோக சுவர்க்கத்தைத் தரிசித்தனர் காதலர்கள். ஆளுல், காலம் சிரித்தது: ஊர் சிரித்தது; சமூகம் சிரித்தது. கண்கண்ட பூலோக சுவர்க்கமாம் இக்குழந்தையைக் கையால் எடுக்கத் தெம்பின்றி. அவளேப் பரபரவென்று இழுத்துக் கொண்டு ஓடோடி விட்டான் அத்தப் பாவி தேவலோகத்தில் மலரவேண்டிய பாரிஜாத மலர் வழிதவறிப் பூலோகத்தில் பூத்துவிட்டது!" என்ருர் பார்வதி கொழுநன், கண்ணிருடன். - 'ஆதியே! பாரிஜாதம் கருகிவிடும் போலிருக்கிறது. நல்ல முடிவு காட்டுங்கள். துரிதப்படுத்துங்கள்!' என்று ஆதுரப் பட்டாள் சிவை: - - திரிபுரம் எரித்த விரிசடைக் கடவுளுக்குச் சிரிக்கத்தாகு தெரியாது......?

  • 岑 *T
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிள்ளைக்கலி.pdf/103&oldid=1395722" இலிருந்து மீள்விக்கப்பட்டது