பக்கம்:பிள்ளைக்கலி.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11. காளையார் கோயில் ரதம் கோவி. மணிசேகரன் 'நாம் சொல்வதைக் கூடவா, குப்பமுத்தாசாரி தட்டிக் கழிப்பார் ? நான் அப்படி நினைக்கவில்லை, தம்பி’ - பெரிய மருது பாண்டியர் தன்னம்பிக்கையுடன் கூறிஞர். அண்ணுவின் சொல்லைக் கேட்டு அரும்பிய புன்னகையுடன் அமர்ந்திருந்தார் சின்ன மருது பாண்டியர். அவருக்கென்னமோ, சிற்பி குப்பமுத்தாசாரி, காளையார் கோயில் ரதத்தை உரு வாக்க ஒப்புக்கொள்வார் என்ற நம்பிக்கை எள்ளளவும் இல்லை. குப்பமுத்தாசாரி அந்நாளில் கைதேர்ந்த சிற்பி. உண்மை: ஊர் அறியும். சிற்பக் கலையின் மாணிக்கமாய் விளங்கிய மரபில் வந்தவர். தந்தையைவிட மிக அற்புதமான கலைஞர்; நாடே கூறும். இவையெல்லாம் ஒரு பத்தாண்டுகளுக்கு முன்னே. இப்போது: அடங்கி, ஒடுங்கி, தம்மகத்தே ஆமைபோல் அமைதி தேடிக் கொண்டிருந்தார் அவர். அவருக்குக் கலைவாழ்வு வெறுத்துவிட்டது, தமது தந்தையின் இறப்புக்குப் பின்னர். எனவே, குடிவழியில் தொடர்ந்துவந்த மற்ருெரு தொழிலான சோதிடக் கலையைப் பிழைப்பாக மேற்கொள்ளலாஞர் குப்பமுத் தாசாரி. அவர் சிற்பக்கலையில் வெறுப்படைந்ததற்கு முதல் காரணம் இதுதான்; படைத்து வைக்கும் கலைப்பொருட்கள் அனைத்துமே, பாவிகள் வெள்ளைப் பறங்கியர்களால் பாழாகப் போகின்றன: அப்படி இருக்க ஏன் படைக்க வேண்டும்? எதற்காகப் படைக்க வேண்டும்?. படைத்தலைவன் நயினப்ப சேர்வை அரண்மனைக் கூடத்துள் துழைந்தான். கடைசியாகக் குப்பமுத்தா சாரியிடம் அவனைத்தான் துரது அனுப்பி இருந்தனர். . . 'பாண்டிய நாட்டுப் பூபதிகளுக்கு என் வணக்கம். குப்ப முத்தாசாரியாரை. ஒப்புக்கொள்ளச். செய்துவிட்டேன். - இதோ, அவரையும் அழைத்து வந்திருக்கிறேன்' என்ருன் சேர்வை. அகமும் முகமும் மலர மருது பாண்டியர்கள் இருவரும் எழுந்துசென்று வரவேற்றனர். இவர்கள் நாட்டுக்குக் காவலர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிள்ளைக்கலி.pdf/106&oldid=1395725" இலிருந்து மீள்விக்கப்பட்டது