பக்கம்:பிள்ளைக்கலி.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 3 பிறகு அவர் எழுந்து நின்று வெளியில் தலையை நீட்டி, 'யாரது ?' என்ருர். என்ன! நான்தான் சுந்தரம். இன்னும் என் குரல் தெரியவில்லையா?” என்று உரத்த குரலில், கடகடவென்று சிரித்துக்கொண்டு உள்ளே நுழைந்தார் வந்தவர். அவருடைய சிரிப்புக்கு இசைந்தபடி காலில் போட்டிருக்கும் ஜோடு தாளம் போட்டது. என்ன, சுந்தரமா? வா! வா! இப்பொத்தான் உன்னைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். நீயும் வந்தாய். காப்பி போடச் சொல்லட்டுமா? அலமு: அலமு!’ என்று உரக்கக் கூவினர் முருகதாசர். எங்கிருந்தோ, 'என்னப்பா!' என்று அலமுவின் குரல் வந்தது. 'அம்மாவை மூணு கப் காப்பி போடச் சொல்லு. சீக்கி ரம் ஆகணும்!' 'நீ என்ன பத்திரிகையை விட்டுவிட்டாயாமே! இப்பத் தான் கேள்விப்பட்டேன்.' 'வயிற்றுப் பிழைப்பிற்கு எதில் இருந்தால் என்ன? சீலைப் பேன் குத்துகிறதும் ஒரு பிசினஸ்'ஆக இருந்து, அதில் ஒரு "சான்ஸ் கிடைத்தால், அதையும் விட்டாவைக்கிறது ? நான் பத்திரிகையை விட்டுவிட்டா, கதை எழுதாமல் இருந்து விடு வேன ? ஒரு பெரிய நாவலுக்குப் பிளான்” போட்டிருக்கேன். தமிழன்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தால், எனக்குக் காகிதம் வாங்க வாவது காசு கிடைக்கும். அதில் 'சென்ட்ரல் ஐடியா என்ன 'நீங்க நேற்றுப் பொருட்காட்சிக்குப் போனிர்களாமே ?” என்று பேச்சை மாற்ற முயன்ருர் சுப்பிரமணிய பிள்ளை. இந்த விஷயத்தைத் தொட்டுவிட்டால், முருகதாசர், கீறல் விழுந்த கிராமபோன் பிளேட் மாதிரி, விடாமல் திருப்பித் திருப்பி அதையே கதைத்துக் கொண்டிருப்பார்! 'அப்பா: காப்பியாயிட்டுது. நீதான் வந்து எடுத்துக்கிட்டுப் போகனும். சுடுது!" என்று சொல்லிக் கொண்டு, நிலப்படி இரண்டு பக்கத்தையும் தொட்டவண்ணமாய், ஒற்றைக்காலை ஒட்டிக்கொண்டு நின்ருள் அலமு. 'அம்மா எங்கே?'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிள்ளைக்கலி.pdf/11&oldid=1395627" இலிருந்து மீள்விக்கப்பட்டது