பக்கம்:பிள்ளைக்கலி.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 2 3 'நாங்கள் இன்று ஊர் புறப்படுகிருேம். உங்கள் நினைவுக்கு அறிகுறியாக இந்தப் புத்தகத்தின் முதற் பக்கத்தில் நீங்கள் என்னைப் பற்றிப் பாடிய அந்தப் பாட்டை மட்டும் எழுதிக் கையெழுத்திட்டுத் தருவீர்களா ?” அவள் விருப்பப்படியே கண்பூவாய்' என்ற அந்தப் பாட்டை அப்படியே அரைகுறையாக எழுதிக் கையெழுத்திட்டுத் தந்தேன். வணங்கி நன்றி சொல்லிவிட்டுப் போனள். இது வரை எங்குமே என்றுமே கண்டிராத அந்த எழில் முகத்தைக் கூடியவரை மனத்தில் பதித்துக் கொள்ள முயன்றேன். மனம் எதற்கோ ஏங்குகிறது. உதகமண்டலம், மே மாதம், 20ஆம் தேதி, இரவு : போயும் போயும் இது என்ன ஊர் : இங்கே குதிரைப் பந்தயத்தைப் பற்றிக் கவலைப்படுகிற மனிதர்கள் இருக்கிருர்கள். தொட்டபெட்டா சிகரத்தையும், பொடானிகல் கார்டனின் பூ வகைகளையும் பார்த்து வாய் அங்காந்து ரசிக்கிறவர்கள் இருக் கிழுர்கள். ஆளுல், கமலக்கண்ணன் என்கிற கவியைப் பற்றி நினைக் கிறவர்கள் கூட இந்த ஊரில் இருப்பதாகத் தெரியவில்லை. மனமே வறண்டு விட்டது. நாளைக் காலையில் இங்கிருந்து ஊருக்குப் புறப்பட்டுவிட வேண்டியதுதான். உதவியாசிரியர் சந்திரசேகரன் டைரியின் பக்கங்களை மூடி விட்டு நிமிர்ந்தார். கவிஞரை நோக்கிக் கூறினர்: **<rr仔药 உங்களிடம் பாட்டு எழுதிக் கையெழுத்து வாங்கிக்கொண்டு போன இந்தப் பெண்ணை எனக்கு நன்முகத் தெரியும். அவள் இப்போது இந்த ஊரில்தான் இருக்கிருள். அவளேப் பார்த்து நீங்கள் அந்த அரைகுறைப் பாடலே நிறைவு செய்ய முடியுமானல் இன்று மாலேயே அவளிடம் உங்களை அழைத்துப் போகிறேன்." இதைக் கேட்டு கவிஞரின் முகம் மலர்கிறது. கண்களில் ஒளி பாய்கிறது. - நிஜமாகவா சந்துரு ?" 'சத்தியமாக. நீங்கள் சாயங்காலம் பாருங்களேன்: 'அந்தக் கந்தர்வசுந்தரி எனக்குக் கவிதை தந்தவள். அவளே நான் மறுபடி காண முடிந்தால் ஒரு கவிதை என்ன ? உன் ஆண்டு மலருக்கு ஒரு காவியமே எழுதித் தருகிறேன் அப்பா."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிள்ளைக்கலி.pdf/121&oldid=1395740" இலிருந்து மீள்விக்கப்பட்டது