பக்கம்:பிள்ளைக்கலி.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

夏莲8 பகள் வாழ்வு நிலைகுலையாமல் இருக்க வேண்டும் என்பதை நினைத்து, தனது உடைமை என்றிருந்தவற்றை யெல்லாம் மகளுக்குக் கொடுத்துவிட்டான் கிழவன். மேலும் சில தினங்கள் தன் மகளோடு தங்கியிருந்தபோது, கிழவனுக்கு மனநிறைவு ஏற்படவில்லை. தன்னையே தாழ்த்திக் கொண்டதொரு நடுக்கம் இருந்துகொண்டே இருந்தது. மருமகனின் போக்கை ஆராய்ந்தான். எதுவுமே அவனுக்குப் பிடிபடவில்லை. அவன் தன்னை ஒரு பொருட்டாகவே மதிக்க வில்லை என்றே பட்டது அவனுக்கு. ஆணுல் செல்லம்மாள் மகிழ்வு ததும்ப நின்ருள். எதிலுமே ஆரம்பம் இப்படித்தானே இருக்கும் என்ற பயமே ஏற்பட்டது கிழவனுக்கு. இன்றைக்கே, கிழவனைப் பார்க்கும்போது மாப்பிள்ளையின் பார்வையில் அருவெருப்பு நிறைந்துவிடுகிறது. இது அவள் மீது திரும்ப எவ்வளவு காலமாகப் போகிறது. வாழ்வின் உயிர்த் தளத்தையே இழந்துவிட்டது போன்ற உணர்வில் கிழவன் ஊர் திரும்பினன். எங்களோடுதான் நீங்களும் இருக்க வேண்டும்’ என்று மருமகன் வற்புறுத்திச் செர்ல்லவில்லையே. மீண்டும் அந்தச் சுடலையிலே வந்து உட்கார்ந்தான். நேற்றுவரை தெம்பூட்டிய இந்தச் சூழ்நிலை இப்போது -சோர்வைக் கொடுத்தது. அவனது மனைவி இறந்தபோது ஏற்பட்ட பிரிவுணர்ச்சி மீண்டும் தலைதுாக்கியது. மனைவி இறந்த பிறகு - அவள் நினைவோடு - மகளுக்காக உயிர் வாழ்ந்தான். உழைத்தான். இன்றைக்கு மகளோடு உறவு கொள்ளப் புதிய பங்காளி நுழைந்து விட்டான். மீண்டும் தனிமை. இனி என்ன பாக்கி நிற்கிறது. இப்படியே செத்துப் போகலாம். ஆனல் சாவதிலும் நிம்மதி இருக்க வேண்டாமா? இவ்வளவு காலமும் ஊண் உறக்கமின்றியே மகளுக்காகக் கவலைப்பட்டுக் கொண்டிருந்தான் கிழவன். அந்தக் கவலை தீர்ந்துவிட்டதா ?-செல்லம்மாள்-என்றும் கவலையற்று வாழப் போகிருளா ? இதில்தான் கிழவனுக்கு நம்பிக்கை ஏற்பட வில்லையே,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிள்ளைக்கலி.pdf/146&oldid=1395765" இலிருந்து மீள்விக்கப்பட்டது