பக்கம்:பிள்ளைக்கலி.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28


கதையில் அந்தக் கட்டத்திற்கு நான் வருவதற்கு முன்னல் அவர் காலமாகிவிட்டார். அதற்காக வருத்தப்பட வேண்டாம். அவருக்குப் பதிலாக அவருடைய மனைவியைத் தெரிந்துகொள்ளுங்கள். அந்த அம்மா ளுடைய உண்மைப் பெயர் என்னவோ நமக்குத் தெரியாது. ஊரிலே எல்லோரும் பிடாரி” என்று அவளை அழைத்தார்கள். அந்தப் பெயரே நமக்குப் போதுமானது. பிடாரி, பெருமாள் கோளுருக்கு இரண்டாம் தாரமாக வாழ்க்கைப்பட்டாள். முதல் மனைவியிடம் கோளுர் ரொம்ப ஆசை வைத்திருந்தார். அவளுக்குக் குழந்தை பிறக்காதது ஒன்றுதான் கோளுருக்குக் குறையாயிருந்தது. அவள் இறந்த பிறகு, தம்முடைய சொத்துக்கு வாரிசு, இல்லாமல் போகிறதே என்பதற்காக இன்னெரு தாரத்தை மணந்து கொண்டார். இரண்டாவது மனைவி அவருடைய விருப்பத்தை என்னவோ நிறைவேற்றி வைத்தாள். மூன்று குழந்தைகள் பிறந்தன. ஆனலும் இந்தப் பிடாரியை ஏன் கலியாணம் செய்துகொண்டோ மென்று அவர் பல முறை வருத்தப்பட்டதுண்டு. கோளுர் இறந்ததும், பிடாரி தன் தலையிலிருந்த பெரிய பாரம் இறங்கியதுபோல் பெருமூச்சு விட்டாள். இனிமேல் வீடு வாசல் நிலபுலன் எல்லாவற்றிற்கும் தானே எஜமாணி. ஐந்து வயதுப் பிள்ளை மேஜராகும் வரையில் தன் இஷ்டப்படி எல்லாம் நடக்கும். ஊரையே ஒர் ஆட்டு ஆட்டிவிடலாம். பூரீமதி பிடாரி தேவியிடம் நீங்கள் அநுதாபம் காட்ட வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். அவள் கட்சியிலும் கொஞ்சம் நியாயம் உண்டென்பதைக் கவனிக்க வேண்டும். கோளுர் ரொம்பக் கண்டிப்புக்காரர். அவரிருந்த வரையில் அவளுடைய பிடாரித்தனத்தின் முழுச் சக்தியையும் வெளிக்காட்ட முடியாமலிருந்தது. அதிலும் அவர் நோயாய்க் கிடந்த காலத்தில் படுத்தி வைத்த பாடு சொல்லத்தரமல்ல. பூங்கொடிதான் அவர் பக்கத்தில் இருக்கலாம். வேறு யாராவது பக்கத்தில் போனலும் 'வள்வள் என்று விழுகிறது. இதல்ை இந்தப் பெண்ணுக்குத் தான் எவ்வளவு கர்வம்! அந்தக் கொட்டத்தை யெல்லாம் இப்போது பார்க்கலாம். கோளுர் காலஞ்சென்று நான்கு நாள் ஆயிற்று. வர வேண்டிய உறவு முறையினர் எல்லோரும் வந்து போய் விட்டார் கள். பிடாரி அம்மாள், வீட்டில் ஒருவரும் இல்லாத சமயம் வாசல் கதவைத் தாழிட்டுவிட்டு வந்தாள். கூடத்தின் மத்தியி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிள்ளைக்கலி.pdf/26&oldid=1395642" இலிருந்து மீள்விக்கப்பட்டது