பக்கம்:பிள்ளைக்கலி.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92


நேத்து வந்த மாதிரி இருககு முப்பது வருஷங்கள் தாண் டிட்டுதே! என்ருர் சாஸ்திரி. கால ஓட்டத்தை மனத்தால் அளந்து கொண்டிருந்தார். 'போதாதா சாஸ்திரிகளே ? முப்பது வருஷங்கள் உழைச் சாச்சு, இனி மேலாவது ஒய்வு வேண்டாமா ? வேலை பார்த்துப் பார்த்து என்னத்தைக் கண்டோம் ? விடுதலை வேண்டாமோ ?” என்ருர் பிள்ளை. மனம் தன்னையே ஏமாற்றிக் கொண்டு அவரை அப்படிப் பேச வைத்துவிட்டது. அப்படிப் பேசியாவது தெம்பூட்ட லாமே என்று தினத்த ரோ என்னவோ! உமக்கென்ன, ஒய் இரண்டு பையன்கள். இரண்டு பேரும் இன்ஜினீயராக இருக்காங்க. ஒவ்வொருத்தளுேடும் கொஞ்ச கொஞ்ச நாள் இருந்து காலத்தை ஒட்டிப்பிடலாம். எதுக்கும் கொடுத்து வைக்கணும் ஒய் என்று தம் பொருமையை வார்த் தைகளில் பொரிந்து விட்டு எழுத்தார் சாஸ்திரி.

  • ♔കേ எழுந்து விட்டீர் ?”

"கொஞ்சம் வேலை இருக்கு. நாளைக்குச் சந்திக்கலாம்,' என்று கூறிவிட்டுச் சென்ருர் சாஸ்திரி. நாய், தலையைத் தூக்கிப் பார்த்தது. சாஸ்திரியின் உருவம் மறைந்ததும் மீண்டும் மணலில் சுருண்டு படுத்துக் கொண்டு கண்களை மூடிக்கொண்டது. சிவராம பிள்ளை மீண்டும் மணலில் படுத்தார். 'எதுக்கும் கொடுத்து வைக்கனும் ஒய். சாஸ்திரி சொன்னது காதில் இரைந்து கொண்டு இருந்தது. எத்தனை பேருக்குச் சிவராம பிள்ளை மீது பொருமை: 'ஒரு தாலுகா ஆபீஸ் குமாஸ்தா இரண்டு பையன்களையும் வளர்த்து இன்ஜினீயராக்கி, பெரிய உத்தியோகத்திலும் இருத்திவிட்டாரே!' தாலேந்து வருஷங்களுக்கு முன்னுல் பொங்கலுக்கு அவருடைய இரண்டு பிள்ளைகளும் வந்திருந்தபோது எத்தனை கண்கள் பொருமையைக் கொட்டித் தீர்த்தன. இரண்டு பேரும் ஆளுக்கொரு காரில் குடும்பத்தோடு வந்து ஒருவாரம் இருந்து விட்டுப்போன நினைவு சிவராம பிள்ளையின் மனத்தில் படர்ந்தது. - அடேயப்பா! சின்னவனுடைய பெண்டாட்டியின் அலங் கர்ரமும் பேச்சும். இருக்காதா? பணக்கார வீட்டுப்பெண். தம் தகுதிக்கு மீறிய குடும்பம் அது. சின்னவன் படிப்புக்கும் உத்தியோகத்துக்கும் அவள் வந்தாள். இந்தச் சிவராம பிள்ளையின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிள்ளைக்கலி.pdf/90&oldid=1395709" இலிருந்து மீள்விக்கப்பட்டது