பக்கம்:பிள்ளைக்கலி.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

93


அந்தஸ்தை எண்ணியா வந்தாள் ? இருக்கத்தானே செய்யும் பணத்திமிரும், அகம்பாவமும். ஆனல் என்னே மாமஞர் என்று நினைக்கக்கூட அவளுக்கு எரிச்சலாக இருந்திருக்க வேண்டாம். அவளுடைய பிள்ளை என்னுடைய சட்டையைத் தொட்டு விட்டதாம். அடேயப்பா, அவள் வந்த வரத்து! ஏதோ தீண்டத் தகாத பொருளை எடுப்பது போலல்லவா இடது கைவிரலால் சட்டையைத் தூக்கி எறிந்தாள். தாலுகா ஆபீஸ் குமாஸ்தாவின் அது கசங்கிப்போய், வெளிறிப் போய்த்தானே . سا(5 سبب تقي இருக்கும்! ஆல்ை இவள் புருஷன் இந்த குமாஸ்தா பெற்ற பயல் தானே? ... நதியின் சலசலப்புக் கேட்டுக் கொண்டிருந்தது. நகர சபைச் சங்கு ஊதியது. மணி ஒன்பது. எழுந்திருப்போமா ? எழுந்து போய் என்ன செய்யப் போகிாய் ? சாயங்காலம் டீ பார்ட்டியிலே சாப்பிட்ட வடை முய - 14. இன்னும் ஜீரணமாகவில்லை.' படுத்தவாறே கண்களை மூடிக்கொண்டார் சிவராம பிள்ளை. எதையோ நினைத்துக் கொண்டிருந்தோமே... ஆ. அந்தக் கர்வக்காரி, இவை யவன் பெண்டாட்டி... அவளைச் சொல்லவும் குற்றமில்லை. நாம் ஒதுங்கிக் கொள்ள வேண்டும். என்ன இருந்தாலும், நான் ஒரு தாலுகா ஆபீஸ் குமாஸ்தாதானே ? எனக்குக் கோபம் வரக்கூடாது. கல்யாணி இருந்தால் இதுக ளெல்லாம் என்னே இந்தப்படி அலட்சியப்படுத்துமா...? அது அது வளர்ந்து அது அதற்குக் குடும்பம் வந்துவிட்டது. வாழ்க்கை வசதியும், பழக்க வழக்கமும் எப்படியோ, அதை நாடிப் போகிருர்கள். போகட்டும்; போகட்டும். இந்தப் பயல் களை நம்பியா இருக்கிறேன். யாருக்கு யார் துணை ? ஒரு பய லுடைய துணையும் வேண்டாம். கடவுள் இருக்கிரு.ர். சின்னவன் சொன்னனே, இப்போதுகூட அதை நினைத்தால் நெஞ்சு வலிக்கிறதே. நான் கேட்டேன : என்னைக் காப்பாத்துடா என்று அவனிடம் போய்க் கெஞ்சினேன ? இந்தச் சிவராம் பிள்ளையை ஊருக்குள் போய்க் கேட்டாலல்லவா தெரியும்: பியூன் முதற்கொண்டு பெரிய அதிகாரிவரை பொறுக்கித் தின்கிறபோது, நான் ஒரு பயலிடம் கைநீட்டிக் காசு வாங்கி யிருப்பேன? நேர்மையும், மானமும்தான் மனிதனுக்கு முக்கியம். இதுவரை அப்படியே வாழ்ந்தாகிவிட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிள்ளைக்கலி.pdf/91&oldid=1395710" இலிருந்து மீள்விக்கப்பட்டது