பக்கம்:பிள்ளைப் பருவத்திலே.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெயர். ஆனால், இந்தப் பெயருக்குப் பின்னல், தகப்பனுர் பெயரையும், அதற்குப் பின்னல் குடும்பப் பெயரையும் சேர்த்து விநாயக் கரஹரி பாவே' என்றுதான் பல ஆண்டுகள் அழைத்து வந்தார்கள். இந்த நீண்ட பெயரை விகோபா என்று காந்திஜி குறுக்கிவிட்டார். காந்தி வைத்த பெயரைச் சொன்னதும் உங் களுக்கு மட்டுமல்ல; உலகத்துக்கே இன்று தெரிகிறது. - சின்ன வயதில் தின்பண்ட தானம் செய் வதில் மகிழ்ச்சி அடைந்த விநோபா பாவே, பிறகு பூதானம் செய்வதில் பெருமகிழ்ச்சி அடைந்து வந்தார். "உங்களுக்கு ஐந்து குழந்தைகள் இருந்தால் உ ங் களு ைடய நிலத்தை ஐந்து பங்கு போடுவீர்கள். ஒவ். வொரு குழந்தைக்கும் ஒரு பாகம் கொடுப் பீர்கள். ஆறு குழந்தைகள் இருந்தால், ஆறு பங்கு போடுவீர்கள் அல்லவா? என்னையும் உங்கள் கு ழ ங் ைத யாக ஏற்றுக்கொண்டு எனக்கு ஒரு பங்கு கொடுங்கள்" என்று கிலம் வைத்திருந்தவர்களை அவர் கேட்டார். தான மாகக் கிடைத்த கிலத்தை, அவர் நிலம் இல் லாத ஏழைகளுக்குப் பங்கு போட்டுக் கொடுத் தார். மகாத்மா காந்திக்குப் பிறகு, அவரு டைய கொள்கைகளைப் பின்பற்றி, மக்களுக்கு அறநெறியில் வழிகாட்டி வங்த பெரியவர் விநோபா அவர்களே. 106