பக்கம்:பிள்ளைப் பருவத்திலே.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாயமாய் மறைந்தவன் ! இதைச் சொல்லும் போதே, நமக்கு ஒரு வீர உணர்ச்சி ஏற்படுகின்றது; நம் தேசபக்தி அதிகமாகின்றது. ஜெய் ஹிந்த்-அதாவது வெல்க இங் தியா' என்ற மந்திரத்தை நமக்கெல்லாம் சொல்லித் தந்தவர் யார்? நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் எ ன் ப து உ ங் களு க் குத் தெரியும். சிறிய வயதிலே சுபாஷ் சந்திர போலி டத்தில் தெய்வ பக்தி, தேச பக்தி இரண்டும் இருந்தன. தெய்வ பக்தியை ஊட்டி உடலை வளர்த்தாள், அவருடைய அன்னை பிரபாவதி அம்மையார். தேச பக்தியை ஊட்டி அறிவை 107