பக்கம்:பிள்ளைப் பருவத்திலே.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தார். இப்படி ஒரு மாதமா, இரண்டு மாதங் களா? ஆறுமாதங்கள் ஒய்வின்றி அலைந்தும் அவர் கினைத்தது கைகூடவில்லை. வழியிலே அவர் பல சங்கியாசிகளைக் கண்டார். அவர்களில் பலர் கஞ்சா, பீடி முதலியவற்றைப் பிடித்துக் கொண்டிருங் தார்கள். அவர்களுக்குத் தெய்வ கினைப்பே இல்லை. ஆலுைம், பெரிய பக்தர்கள் போல் பாசாங்கு செய்தார்கள். சுபாஷிற்கு அவர்கள் மீது வெறுப்பு ஏற்பட்டது. அதே சமயம் அப்பா அம்மாவைப் பற்றிய நினைப்பும் வங் தது. "ஐயோ, என்னைக் காணுமல் அம்ம்ா வும் அப்பாவும் எவ்வளவு வேதனைப்படுகிருர் களோ! சரி. இனி அலைவதில் பயனில்லை. உடனே வீடு திரும்ப வேண்டியதுதான்' என்ற முடிவுக்கு வந்தார். விரைவிலே வீடு வந்து சேர்ந்தார். எதிர் பாராமல் திடீரென சுபாஷ் அங்கு வந்ததைக் கண்டதும், எல்லோருக்கும் ஒரே ஆச்சரியம். அப்பொழுது அவருடைய அம்மாவும் மற்ற வர்களும் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. சின்ன வயதில் திடீரெனக் காணுமற் போன சுபாஷ், ஆறு மாதங்களுக்குப் பிறகு திடீரெனத் திரும்பிவந்து சேர்ந்தார். ஆனல், 1941-ல் இந்தியாவை விட்டு மாயமாய்மறைந்த சுபாஷ் பிறகு திரும்பி வரவே இல்லை! 110