பக்கம்:பிள்ளைப் பருவத்திலே.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டனர். எல்லோரும் என்ரு சொன்னேன்? இல்லை; ஒரே ஒருவன் மட்டும் அவரிடம் சரி _fē அகப்பட்டுக் கொண்டுவிட்டான்! அவன்தான் பூக்களைப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்த சிறுவன். > தோட்டக்காரர் மிகுந்த ஆத்திரத்துடன் அவன் அருகிலே ஓடி வந்தார். ஆவேசம் வங் தவர் போலக் கத்தினர். டேய் பொடிப் பயலே, இன்று உனக்குச் சரியான பாடம் கற்பிக்கிறேன், இனி, நீயும் உன் தோழர் களும் இந்தப் பக்கம் எட்டிப் பார்க்காதபடி செய்யப் போகிறேன்' என்ருர், அவரது உருவமே பார்ப்பதற்குப் பயங் கரமாக இருந்தது. என்ன செய்வதென்றே சிறுவனுக்குப் புரியவில்லை. கை கால்களெல் லாம் நடுநடுங்கின. தோட்டக்காரரிடம் அழாக் குறையாக, "ஐயா, நானே பரம ஏழை. எனக்கு அப்பா வும் இல்லை. தயவு செய்து என்னை ஒன்றும் செய்யாதீர்கள்” என்று கெஞ்சிக் கேட்டுக் கொண்டான். “என்ன! ஏழை என்கிருய். அத்துடன் அப்பாவும் இல்லை என்கிருய். அப்பா இல் லாத ஏழை தப்புத் தவறு செய்யலாமோ? மற்றவர்களைவிட நீ மிகவும் கல்லவனுக, யோக்கியனுக நடக்க வேண்டாமோ?’ என்று கேட்டார் தோட்டக்காரர். அச்சிறுவனின் - 113 盛等?盈一&