பக்கம்:பிள்ளைப் பருவத்திலே.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களங்கமற்ற முகமும், அவனது பேச்சும் அவ ரது மனத்தை மாற்றிவிட்டன. சரி, போ. இனி இந்த மாதிரி கடந்து கொள்ளாதே" என்று எச்சரித்து அவனே அனுப்பினர். தோட்டக்காரர் சொல்வது சரிதான். அப்பா இருந்தால், நாம் தவறு செய்தால் திருத்துவார். இப்போது நம்மை காமேதான் திருத்திக் கொள்ள வேண்டும். இனி, மிகவும் நல்லவகை, ஒழுக்கமுள்ளவனுக நான் கடப் பேன்." என்று அவன் தனக்குத்தானே சொல் லிக்கொண்டான். சொன்னதோடு கிற்க வில்லை; செய்கையிலும் காட்டினன். அரிச்சந்திரா பள்ளியில் படித்த அவன், அரிச்சந்திரனைப் போல் சத்தியத்தைக் கடைப் பிடித்தான். அது மட்டுமல்ல; காங்தித் தாத்தா பிறந்த தேதியிலே பிறந்த அவன் (அக்டோ பர் 2-ல்) காந்திஜியின் வழிகளேமுழுக்க முழுக் கப் பின்பற்றின்ை. அவன் வளர, வளர அவனது பேரும், புகழும் வளர்ந்தன. கடைசி காலத்தில், இந்தியாவின் பிரதமராக இருந்து. எல்லோருடைய உள்ளத்திலும் இடம்பெற்று விட்டான், .. நேருஜிக்குப் பிறகு நம் பிரதமராய் விளங் கிய லால்பகதூர் சாஸ்திரிதான் அச் சிறுவன் என்பதை நான் சொல்லவும் வேண்டுமா? 114