பக்கம்:பிள்ளைப் பருவத்திலே.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இப்படி அந்தக் குழந்தைகள் ஆரவாரம் செய்கிருர்கள். ஜோசப்புக்கு வயது 14. அவன் கொஞ் சம் பருமனக இருக்கிருன். பார்ப்பதற்கு அழகாகவும் இருக்கிருன். ஜான், அவனை விட இரண்டு வயது இளையவன். ஒல்லியாக இருக்கிருன்; பார்ப்பதற்கு கோஞ்சானுக இருந்தாலும், வீரமாகச் சண்டை போடுகிருன், ஆனலும், கடைசியில் ஜோசப்தான் வெற்றி பெறுகிருன். குஸ்திச் சண்டை போடும்போது மட்டு மல்ல; பந்து விளையாடும்போதும், நீங்தும் போதும், படகு ஒட்டும்போதும், அவர்கள் பலத்த போட்டி போடுவார்கள். மற்றப் போட்டிகளில் தோற்றுப் போனலும், நீச்சல் போட்டியில் ஜான் தோற்றதே இல்லை. அரை கிமிஷத்தில் அவன் 50 கஜ தூரம் நீந்தி விடுவான் ! விளையாட்டு கேரங்களில்தான் அவர்கள் எதிரிகள்போல் இருப்பார்கள். மற்ற நேரங் களில், இருவரும் மிகுந்த அன்போடு பழகு வார்கள். அப்படியானல், அந்த இருவரும் கெருங்கிய நண்பர்களோ? இல்லை, இல்லை. இருவரும் கூடப் பிறந்தவர்கள்! ஒரே தாயின் வயிற்றுப் பிள்ளைகள் சுற்றிலும் உட்கார்ந்து குத்துச் சண்டையை வேடிக்கை பார்த்தார்களே, அவர்களும் இவர்களின் சகோதர சகோதரிகளே! H24