பக்கம்:பிள்ளைப் பருவத்திலே.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிஞர்களின் வாழ்த்தும் கருத்தும் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை : பள்ளிச் சிறுவர் சிறுமியர்கள் பாடிப் பாடி மகிழ்வெய்த தெள்ளித் தெளித்த செந்தமிழில் தேளுர் கவிகள் செய்துதரும் வள்ளி யப்பா.......... நாமக்கல் கவிஞர் : இனியபொருள் எளியபதம் இணைந்த வாகி இளைஞர்களின் மனங்கவரும் கவிகள் பாடி தனிமுறையில் தமிழ்த்தாய்க்குப் பெருமை கூட்டித் தகுதிமிக்கோர் புகழ்ந்தபல சான்று பெற்றேன் கொத்தமங்கலம் சுப்பு : வள்ளியப் பாவின் பாமாலை-அது வளரும் தமிழுக்குப் பூமாலை அள்ளிக் குடிக்கும் நீரோடை-அது அழகுத் தமிழுக்குப் பொன்குடை செளந்தரா கைலாசம் : வையமே வியக்கும் வண்ணம் வள்ளியப் பா! உன் நெஞ்சுள் தெய்வமே குழந்தை யாகித் திருவிளை யாடல் ஒன்று செய்வமே என்று மெள்ளச் சேர்ந்ததோ ? சிறுவர்க் காகப் பெய்வமே பாடல் என்று பெய்ததோ! உண்மை பேசு ! ராஜாஜி : (மலரும் உள்ளம் இந்திய அரசினர் பரிசு பெற்றபோது) வேறு யாரும் செய்யாத பணி. அந்தப் பணிக்குச் சரியாய் அமைந்தவர், செய்து மேலிடத்துப் பாராட்டுப் பெற்றது வியப்பும் மகிழ்ச்சியும். மேன்மேலும் தமிழ்க் குழந்தை களுக்காக வள்ளியப்பா உழைப்பாராக! அந்த உழைப்புக்குத் தரவேண்டிய ஊக்கத்தை அனவரும் தருவோமாக!