பக்கம்:பிள்ளைப் பருவத்திலே.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேலையில்லாத போது, தோழிகளுடன் அவள் தெருவில் விளையாடிக் கொண்டிருப் பாள். அப்போது, திடீரென அவள் விளை யாட்டை கிறுத்தி விடுவாள். நேராக மாதா கோயிலுக்கு ஓடுவாள். மண்டியிட்டு வணங் குவாள். திரும்பி ஓடிவருவாள். தொடர்ந்து தோழிகளுடன் விளையாடுவாள். இப்படி அடிக்கடி செய்வாள். அவளுக்குப் பதின்மூன்று வயதானது. அப்போது பிரெஞ்சு காட்டின் மீது ஆங்கி லேயர் படை எடுத்திருந்தார்கள். ஆங்கி லேயருடன் சில பிரெஞ்சுக்காரரும் சேர்ந்து கொண்டார்கள். சொந்த காட்டுக்கே துரோகம் செய்துவந்தார்கள். ஆங்கிலேயரின் படை பிரெஞ்சு நாட்டில் புகுந்து பல இடங்களைத் தாக்கியது; கொள்ளே அடித்தது; கொலை செய்தது; தீ வைத்தது. இதையெல்லாம் கேள்விப்பட்ட அச் சிறுமி, கம் காட்டு மக்கள் இப்படித் துன்பப் படுகிருர்களே! எதிரிகளை எதிர்த்து விரட்ட எவருமே இல்லையா?" என்று எ ண் ணி எண்ணி ஏங்கிள்ை. அடிக்கடி இதைப் பற். நியே கினைத்து மனம் உருகினுள். ஒருநாள் அவள், தன் வீட்டுத் தோட்டத் தில் தனியாக உட்கார்ந்து யோசனை செய்து கொண்டிருந்தாள். அப்போது, அவளுடைய பெயரைச் சொல்லி, யாரோ அழைப்பது கேட் 12