பக்கம்:பிள்ளைப் பருவத்திலே.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அன்புள்ள தோழி, இனிமேல் உன் மகன் இங்கு இருந்தால், எங்கள் வேலையெல் லாம் கெட்டு விடும். நீ உடனே இங்கு வந்து அவனைக் கையோடு அழைத்துக் கொண்டு போய்விடு" என்று கடிதத்தின் ஆரம்பத்தில் இருந்தது. இதைப் படித்ததும், அந்த அம்மாள் திடுக்கிட்டாள். - "விடுமுறை கழிந்த பிறகுதான் உன் மக னைத் திருப்பி அனுப்புவேன் என்று ஆசை யோடு என் மகனை அழைத்துச் சென்ருளே, அங்தத் தோழியா இப்படி எழுதுகிருள்! என் மகன் வம்பு வழக்குக்குப் போகமாட் டானே! என்ன காரணமோ?" என்று கவலை யோடு மேலும் படித்தாள். "உன் மகன் இங்கு வங்தது முதல் இரவு வெகு நேரம் சென்றுதான் நாங்கள் துங்குகிருேம். இதனுல், காலையில் விரை விலே எழுந்து வேலைகளைக் கவனிக்க முடிய வில்லை. அவன் கதை சொல்ல ஆரம்பித்து விட்டால், நேரம் போவதே தெரிவதில்லை. பிள்ளைகளோடு காங்களும் சேர்ந்து மணிக் கணக்காகக் கேட்டுக்கொண்டேயிருக்கிருேம். வெகுநேரம் சென்ற பிறகுதான். அடடா, இவ் வளவு நேரம் விழித்திருந்து விட்டோமே!" என்று தோன்றுகிறது. ஆலுைம், அவன் கதையைக் கேட்காமல் இருக்க முடியவில்லை. அவன் இங்கு இருந்தால், தினமும் இப்படித் 24