பக்கம்:பிள்ளைப் பருவத்திலே.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எ ப் ப டி த் திரும்பி வருவார்?’ என்று கூறினுள். சிறுவன், அத்தை சொன்னதைக் காதில் வாங்கிக்கொள்ளவில்லை. தெருவில் சிறிது துரத்தில் வந்து கொண்டிருந்த ஒருவரைக் கூர்ந்து பார்த்துக்கொண்டே கி ன் ரு ன். கஅப்பா அப்பா!' என்று ஆசையோடு அவன் கூவினன். அவர் அருகிலே வந்தார். அவர் முகத்தைப் பார்த்ததும், அவன் முகத்திலே ஏமாற்றக் குறி தெரிந்தது. இவரா என் அப்பா? இல்லை; இல்லவே இல்லை. இவர் யாரோ!' என்று கூறிவிட்டுத் தொப்பென்று தரையில் உட்கார்ந்து விட்டான். இப்படி ஒரு நாளா, இரண்டு நாளா? ஏழெட்டு மாதங்களாகத் தங்தையை எதிர் பார்த்து எதிர்பார்த்து அவன் ஏ மாங் து கொண்டிருந்தான். இறந்தவர் எப்படி உயிர் பெற்று வருவார்? இரண்டு வயதுக் குழந்தையாக இருக் கும்போதே அவனுடைய தாய் இறந்து விட் டாள். தாய் இறந்த பிறகு அவனைக் கிரா மத்திலிருந்து நகர த் தி ற்கு அவனுடைய அத்தை அழைத்துவந்தாள். செல்லமாக வளர்த்துவந்தாள். தங்தை கிராமத்திலே வாழ்ந்தார். அடிக்கடி நகரத்திற்கு வருவார்; மகனைப் பார்த்துவிட்டுப் போவார். ஒருநாள், அவர் கிராமத்திலே நண்பர் ஒரு 32